பக்கம்:ஆண்டாள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி.பr.

பொழுதோடு மாலையைக் கோயிலுக்குக் கொண்டு செல்லுகின்றார். மாலைகள் அர்ச்சகரால் அன்பின் மாறுபாடு தோன்றாமல் சூட்டப்பட்டன. ஆயினும் மலர் மாலையில் வேறுபாடு தோன்றியது. ஆழ்வாரின் மனம் தம்மகள் இழைத்த பிழையை எண்ணி மனக்கலக்கம் கொள்ளுகின்றது.

அன்றிரவு உறக்கம் கொள்ளவில்லை. பெரும்பொழுதை உறங்காமல் கழித்ததனால் சிறிது நேரம் கண்ணயர்ந்தார். இறைவனுடைய தோற்றம் இவருக்குத் தெரிகின்றது. "ஆழ்வாரே. இன்று ஏன் எனக்கு மணமற்ற மாலைகளை இட்டீர்" என இறைவன் வினவுகின்றான். ஆழ்வார் பதிலேதும் கூறாது பிழை பொறுத்தருளக் கண்ணாலும், வாய்பேசாது அமைதி காத்தும், வேண்டுகின்றார். ஆண்டவன் பெரியாழ்வாருக்குக் கோதையின் அருமை பெருமைகளை எடுத்துரைத்து, "இனி அவள் சூட்டிய மாலை களையே எமக்கு அணிவிக்க வேண்டும்" என்கின்றான்.

இந்நிகழ்ச்சியில் இருவகைப்பட்ட கருத்துக்கள் உள. புதிய மாலையைக் கட்டி இறைவனுக்கு அணியச் செய்தார் ஆழ்வார் என்பதொரு செய்தி; சினங்கொண்ட அவர் கோதை சூட்டிய மாலையைப் பெருமானுக்குச் சூட்டாமல் இருந்து விட்டார். அன்றிரவில் அவருடைய கனவில் பெருமாள் எழுந்தருளி விட்டுணு சித்திரை நோக்கித் தமக்கு மாலை சாத்தாத காரணமென்னவென்று வினவ, அவர் கோதை அதனைத் தன் குழலிலே முடித்த செய்தியைக் கூறவும். பெருமாள் அவள் முடித்த மாலைதான் மணமிக்கதாய். விரும்பத்தக்கதாய் இருக்கிறதென்றார்62 (கா. சி. பிள்ளை. ஆண்டாள் வரலாறும், நூலாராய்ச்சியும், ப. 3) என்பது மற்றொரு செய்தி.

எது எங்ங்னமாயினும் இறைவன் பெரியாழ்வார் கனவில் தோன்றியதும், சூட்டிய மாலை கேட்டதும் யாராலும் மறுக்கப்படாத செய்திகளாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/41&oldid=957510" இலிருந்து மீள்விக்கப்பட்டது