பக்கம்:அரை மனிதன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
"அரை மனிதன்"



1

நான் அரை மனிதன்; எப்படி அரை மனிதனாக இருக்க முடியும்? அதாவது சம்பாதிக்க முடியாத மனிதன். அதாவது முழு மனிதனாக ஆக முடியவில்லை. இன்னும் உங்களுக்கு வேறு விதமாக விளக்கினால் நன்றாக இருக்கும். அதாவது என் 'கால்' ஒன்று நொண்டியாகி விட்டேன். நிற்கவேண்டும். அது கூட ஏதாவது பிடித்துக் கொண்டு நிற்க வேண்டும். அது தான் தம்பி கொடுத்தானே மரக்கட்டை. அதை வைத்துக் கொண்டுதான் நிற்கிறேன். ஏன் நடக்கவும் முடியும்.

இந்த ஊரிலேயே நான் தான் பெரிய மனிதன். அதாவது நான் ஒன்றும் ஊழலில் அகப்பட்டுக் கொண்டு என் பெயர் ஒன்றும் பத்திரிகையில் வரவில்லை. அப்படி வந்தால்தான் நீங்கள் பெரிய மனிதர்கள் என்று நினைப்பீர்கள். இப் பொழுது யார் யார் பெரிய மனிதர்கள் என்ற பட்டியல்தான் பத்திரிகைகளில் வருகிறதே. பெரிய பெரிய மனிதர்கள் கையிலே விலங்கு போட்டு இழுத்துப் போகப்படுகிறார்கள். யாராவது நினைத்திருப்பார்களா? என்னமோ உலகத்திலே நல்லது பொல்லது பற்றி ஆத்ம விசாரணைகள் நடக்கின்றன. அவ்வளவுதான்.

நான் பெரிய மனிதன் என்றால் என்ன அர்த்தம். நான் போக வர பெரிய கார், எடுபிடி ஆட்கள் இருக்கிறார்கள் என்பது அர்த்தம் அல்ல. எனக்கு ஒரு கால் 'அவுட்'. அதாவது என்னிடம் இருக்கமாட்டேன் என்று நீங்கிவிட்டது. அதாவது நொண்டி. யாராவது நொண்டியை நீங்கள் பார்த்திருக்கிறீர்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/7&oldid=1461913" இலிருந்து மீள்விக்கப்பட்டது