பக்கம்:அரை மனிதன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

அரை மனிதன்


 வாழும்' என்ற நம்பிக்கையை ஊட்டுவதே அந்தப் படங்கள் தானே. மேல் மட்டத்திலே இருக்கிறவர்கள் கலையை ரசிக்கிறார்கள். நாங்கள் கதையிலே ஏதாவது நீதி இருக்கிறாதா என்றுதான் பார்க்கிறோம். முக்கியமா 'பயப்படக்கூடாது'. இது எங்கள் வாழ்கைக்கு ரொம்ப அவசியம். கஷ்டம் வந்தால் தாங்கிக் கொள்ள வேண்டும். இதெல்லாம் அது சொல்லிக் கொடுக்கிறது". 'அடி உதை' எங்கள் உலகம் அதை அதிலே பார்க்க முடிகிறது என்று அந்தப் பையன் ரங்கன் சொன்னான்.

அதற்குள் அவள், அதுதான் 'மே' நடுவிலே குறுக்கிட்டாள். "வாத்தியாரைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அதனால் அவர் குறைந்து போகமாட்டார்."

"அந்தக் கம்சலையை அசிங்கப்படுத்தியதுதான் எனக்குச் சரி என்று படவில்லை" என்று சொன்னாள்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏழைகளின் சமுதாயத்தை உயர்த்த வேண்டிய ஆசிரியர் மிகவும் தாழ்த்தி விட்டார் என்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று. அவர்கள் மொழியைப் பயின்று அப்படியே தத்ரூபமாகக் காட்டும் ஆசிரியர் அவர்களைத் தாழ்த்துவதால் என்ன பயன். அந்த கதாபாத்திரத்திலே வருகின்ற நடிகனைத் தாக்குவதற்கு மாறாக அவளைத் தாக்கியது அவ்வளவு பொருத்தமாகப் படவில்லை.

ஏழைகளின் வாழ்க்கையைத் தீட்டும் கதை அது. ஆனால் அவர்கள் வாழ்க்கையை உயர்த்த அது பயன்படவில்லை என்பதை அதைப்படித்துப் பார்த்த பிறகுதான் தெரிந்தது. அதன் ஆசிரியர் பெயர் எனக்குத் தெரியவில்லை. அது கிழிந்துவிட்டிருந்தது. அதைப்பற்றி நானும் கவலைப்படவில்லை. சினிமா கதைப் புத்தகங்கள் எல்லாம் அப்படித்தான் கிழிந்து கிடந்தன. ஆசிரியரைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள். விஷயம்தானே முக்கியம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/44&oldid=1461952" இலிருந்து மீள்விக்கப்பட்டது