பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


நெற்றி பசந்து ஒளி மழுங்குதலால், நீ பண்டு தெளித்துக் கூறிய சொற்கள் என்ன பயனைச் செய்தன? நின் செயலுடன் ஒவ்வாது பொய்த்தலால் இப்போது நீ கூறுவனவும் அத் தகையனவாய் ஆவதே அல்லாது ஒரு பயனும் செய்யாது!” எனத் தோழி தலைவனிடம் எடுத்து உரைத்தாள்

57. பேரழகுடையவளோ அவள்? பகலில் தோன்றும் பல் கதிர்த் தீயின் ஆம்பல்அம் செறுவின் தேனூர் அன்ன இவள் நலம் புலம்பப் பிரிய, அனைநலம் உடையளோ மகிழ்ந நின் பெண்டே? - ஐங் 57 “பகற்பொழுதை உண்டாக்கும் செங்கதிரைப் போன்று தோன்றும் பல கதிர்களையுடைய வேள்வித் தீயையும் ஆம்பல் நிறைந்த வயல்களையும் உடையது தேனுளர். அந்த ஊரைப் போன்றவள் இவள். இவளது அழகு தனிமையுற்று வருந்து மாறு பிரிதலின், நீ அங்ஙனம் பிரிந்து போகத் தக்கவாறு, நின் பரத்தை அவ்வளவு அழகு உடையவளோ!” எனத் தோழி தலைவனை எதிர்த்து வினவினாள்.

58. அவர்க்கும் அனையையால்! விண்டு அன்ன வெண்ணெற் போர்வின் கை வண் விராஅன், இருப்பை அன்ன இவள் அணங்குற்றனை போறி, பிறர்க்கும் அனையையால் வாழி நீயே - ஐங் 58 “மலையைப் போல் உயர்ந்த வெண்ணெல் போர்களையும் வரையாமல் கொடுக்கும் கொடையையும் உடையவன் விராஅன் என்பவன். அவனுடைய ஊர் இருப்பை. அவ் ஊரை ஒத்தவள் இவள். இத் தகையவளால் வருத்தம் அடைந்தவன் போல் துன்புற்றாய். பிற மகளிரிடமும் நீ இத் தன்மையை உடையாய்! ஆதலால் அமைக” எனத் தோழி தலைவனுக்கு இடித்துச் சொன்னாள்.

59. நோமென் நெஞ்சு!

கேட்டிசின் - வாழியோ, மகிழ்ந ஆற்றுற, மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர