பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

19


தலைவி, “தோழியே மங்கையர் நீர் முள்ளியின் வேரில் அமைந்துள்ள வளையிலே வாழும் நண்டை வருத்தியும் மலர்களைப் பறித்தும் விளையாடிய புனல் அணி ஊரன், களவொழுக்கக் காலத்தில், நாம் தெளியக் கூடியவற்றைச் சொல்லித் தெளிவித்தான். நம்மை மணந்தாள். அத்தகை யவன் இன்று, ஒழுக்கம், உரை என்னும் இரண்டினாலும் தீண்டி வருத்தும் தெய்வமாய் விளங்குவதற்குக் காரணம் யாதோ?” எனத் தோழியை வினவினாள்.

24. துறப்பது எதற்காக? தாய் சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு பிள்ளை தின்னு முதலைத்து அவன் ஊர் எய்தினன் ஆகின்றுகொல்லோ? மகிழ்நன் பொலந் தொடி தெளிர்ப்ப முயங்கியவர் நலம் கொண்டு துறப்பது எவன்கொல் - அன்னாய்?

- ஐங் 24 தோழி, “அன்னையே! மகிழ்நனுடைய ஊர், தாய் சாவப் பிறக்கும் புள்ளி பொருந்திய நண்டோடு தன் பார்ப்பையே (குஞ்சுகளையே) உண்ணும் முதலையையும் உடையது. அத் தன்மையுடைய ஊரை உடையவன். சேரியில் உள்ளவர் கூறுவ தால் இங்கு வந்தனனோ? அங்ஙனம் வந்தவன் பொன்னால் ஆன தொடிகள் ஒலிக்கத் தன்னைக் கூடிய மகளிரின் நலத்தை நுகர்ந்தும் அவரது நலம் கெடும்படி அவரையே துறப்பது எதை எண்ணியோ? சொல்லுக?” என்று தலைவன் பொருட்டாகத் தூதாக வந்தவர் கேட்கத் தலைவிக்குச் சொன்னாள்.

25. தலைவன் மார்பு உறவுக்கு வருந்தும் புயல் பறம்தந்த புனிற்று வளர் பைங் காய் வயலைச் செங் கொடி களவன் அறுக்கும் கழனி ஊரன் மார்பு பலர்க்கு இழை நெகிழ் செல்லல் ஆக்கும் - அன்னாய்! - ஐங் 25 தோழி, “அம்மே! இல்லத்துக்கு அண்மையில் நட்டு வளர்த்த முற்றாத பசுமையான காய்களையுடைய வயலை யின் சிறந்த கொடியை, நண்டு தன் கூரிய நகத்தால் அறுக்