பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

49


மகளான இவள். யான் உற்ற நோய் நீங்குதற்குரிய மருந்தான

பருத்த தோள்களை யுடையவள். ஆனாள்” என்று தலைவன்

மகிழ்ந்து கூறினான்.

100. யாழினும் இனிய சொல்லினள்!

புனலாடு மகளிர் இட்ட ஒள்ளிழை

மணலாடு சிமையத்து எருமை கிளைக்கும்

யாணர் ஊரன் மகளிவள்,

பாணர் நரம்பினும் இன் கிளவியளே. - ஐங் 100

தோழி, “நீரில் ஆடிய மகளிர் களைந்து வைத்த அணிகள் மணலில் மறைந்தவற்றை அம் மணற் குன்றின் மேல்நின்று எருமைகள் தம் கொம்புகளாலும் குளம்பினாலும் கிளைத்து வெளிப்படுத்தும் புது வருவாயை உடைய ஊரனின் மகளான இவள் பாணரின் இனிய நரம்பினின்று எழும் இசையை விட இனிய மொழிகளை உடையவள் ஆவாள்” என்று தலை வனுக்குக் கூறினாள்.