பக்கம்:அறநெறி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 33

வாழ்க்கையில் நம்மைக் காட்டிலும் பொருட்செல்வம் குறைவாக உள்ளவர்களைக் கண்டு அவர்களைக் காட்டி லும் நாம் வசதியாக வாழும் வாய்ப்புப் பெற்றிருக் கிறோமே என்று மனத்தில் அமைதிகொள்ள வேண்டுமாம். ஆனால் நம்மைக் காட்டிலும் கற்றவர்களைக் காணுகின்ற நேரத்தில் இவர் அறிவுக்கு நம் அறிவு எம்மாத்திரம் என்று கருத்தழிய வேண்டுமாம், இவ்வாறு குறிப்பிடுவார் குமரகுருபரர்.

தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை அம்மா பெரிதென்று அகமகிழ்க-தம்மினும் கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம் எற்றே யிவர்க்குங்ாம் என்று

நீதிநெறிவிளக்கம் 220

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. கல்விக்கு ஒர் எல்லை இல்லை என்பதேயாகும். எனவே ஒதுவதனை-படிப்பதனை-ஒழியேல்-விடாமல் தொடர்ந்துகொண்டேயிருக்க வேண்டும் என்பதாகும்.

தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவரும், திரைப்படப் பாடல்கள் துறையில் தம் முத்திரையைப் பதித்தவருமான கவியரசு கண்ணதாசன் அவர்கள்,

சாவில் தமிழ் படித்துச் சர்க வேண்டும்; எந்தன்

சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும் என்று தம் தணியாத தமிழ்ப் பற்றையும், சாகும் வரை தாம் தமிழ் படிக்க வேண்டும் என்று கொண்ட வேட்கை யினையும் வெளிப்படுத்திக் காட்டினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/35&oldid=586889" இலிருந்து மீள்விக்கப்பட்டது