பக்கம்:அறநெறி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ვ8 அறநெறி

தன்றோ? ஜான் ரஸ்கினின் அண் டு தி லாஸ்ட் (Un to the last) என்னும் நூல் அண்ணல் காந்தியடிகள் மனத்தில் ஒர் உயர்ந்த சிந்தனையை உருவாக்கவில்லையா? திருவள்ளுவர், கன்பூசியஸ், மார்க் அரேலியஸ், கலில் இப்ரான், உமார் கயாம், ஷேக்ஸ்பியர், பெர்னார்ஷா, பெட்ரண்ட ரஸ்ஸல் முதலானோர் நூல்கள் இன்றும் நிலைத்து வாழ்கின்றனவே!

எனவே, மனிதன் மனிதனாகத் திகழ படிக்கவேண்டும்; படித்துக் கொண்டேயிருக்க வேண்டும். சமயங்களை உருவாக்கிய பெருமக்கள் தாம் உணர்ந்ததை உலகிற்கு உணர்த்தினார்கள். மகாவீரர், புத்தர், ஏசுநாதர், நபிகள் நாயகம், திருமூலர், நாயன்மார்கள், ஆழ்வார்கள், மத்துவர், இ ரா மா னு ச ர், இராமகிருட்டினர், விவேகானந்தர், இராமலிங்கர், தாயுமான தயாபரர் முதலானோர் உபதேசித்த உண்மைகளால் மெய்ஞ் ஞானம் வளர்ந்தது என்றால் அது மிகையன்று.

படித்தால் படியலாம் என்பர். கல்வி கற்றவர் அடங்கி அடக்கமாக இருப்பர் என்கிறார் சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர். நெற்பயிர் கதிர்முற்ற முற்றத் தலை சாய்வது போலக் கற்றவர்கள் கல்வி மிகமிக அடக்கம் பெறுவர் என்கிறார்.

சொல்லரும் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல் மெல்லவே கருவிருந் தீன்று மேலலார் செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்தநூல் கல்விசேர் மாந்தரின் நிறைஞ்சிக் காய்த்தவே

(-வேக சிந்தாமணி, நாமகள் இலம்பகம் : 24)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/40&oldid=586916" இலிருந்து மீள்விக்கப்பட்டது