பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

61


உணவைத் தேடித் திரியும் வெண்ணிற நாரை அன்றி வேறு எவ் உயிரும் அடைதலை ஒழித்ததாகும். நாங்கள் எமது கூந்த லுக்கு இட்டுப் பிசையும் பொருட்டு, எரு மண்ணைக் கொண்டு வருவதற்காக அங்குச் செல்வோம். பெரிய பேதைமை உடைய தலைவியும் அவ் இடத்துக்கு வருவாள்.” எனத் தோழி தலைவனை அங்கு வரும்படிக் குறிப்புணர்த்தினாள்.

121. பொய்யர் போல்வர்

குருகு கொள்க் குளித்த கெண்டை அயலது உரு கெழு தாமரை வால் முகை வெரூஉம் கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர! ஒரு நின் பாணன் பொய்யன் ஆக, உள்ள பாணர் எல்லாம் * கள்வர் போல்வார், நீ அகன்றி.சினோர்க்கே.

- ஒரம்போகியார் குறு 127 “நாரையால் கவர்ந்து கொள்ளப்பட்டு அதன் வாயி லிருந்து தப்பி நீருள் குதித்து மறைந்த கெண்டை மீன், அதன் பின்பு அருகிலுள்ள வெள்ளை நிறம் பொருந்திய தாமரையின் அரும்பை நாரை என்று அஞ்சி ஒளியும் வயற் பக்கங்களை உடைய காஞ்சி மரங்கள் நிறைந்த ஊரையுடைய தலைவனே, நின் பாணன் ஒருவன் பொய் பேசுவான் என்பதனால் மற்று முள்ள பாணர்கள் யாவரும் நின்னைப் பிரிந்து தனித்தி ருக்கும் தலைவிக்குப் பொய்யுரைப்பவர் போல் தோன்று கின்றனர்” என்று தோழி தலைவனிடம் இயம்பினாள்.

122. ஊர் உறங்கினும் யாம் உறங்கோம் கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே - எம் இல் அயலது ஏழில் உம்பர், மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.

- கொல்லன் அழிசி குறு 138 இப்பெரிய ஊரில் உள்ள யாவரும் துயில்கின்றனர். யாங்கள், எமது வீட்டிற்கு அயலே உள்ளதும், ஏழில் குன்றத்