பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

89


அறிவுள்ள குயவனே, ஆம்பல் நெருங்கிய இனிய பெரிய மருத நிலத்தில் பொய்கையுள்ள ஊர்க்குப் போய்ச் சேர்ந்து, அங்குள்ள மகளிரைப் பார்த்து, “கூரிய பற்களையும் மெல்லிய தாய் அகன்ற அல்குலையுமுடைய மகளிரே, கை விரலால் வாசிக்கப்படும் நரம்பின்ாலே பாட்டுப் பாடும் பாணன் செய்த துன்பங்கள் பெருகின. இவன் பொய் பொதிந்த கொடிய சொற்களை நம்பாமல் உம்மைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று இதனையும் சேர்த்து அங்குக் கூறிச் செல்லுக” என்று பரத்தையிடமிருந்து வந்த தலைவன் துரதனுப்ப அதனைத் தலைவி வெறுக்கையில், திருவிழா பற்றி பெருமிதம் பேசும் குயவனிடம் தோழி கூறினாள்.

165. பண்பே செல்வம் அரிகால் மாறிய அம் கண் அகன் வயல் மறு கால் உழுத ஈரச் செறுவின், வித்தொடு சென்ற வட்டி பற்பல மீனொடு பெயரும் யாணர் ஊர! நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்று தன் செய் வினைப் பயனே; சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே.

- மிளைகிழான் நல்வேட்டனார் நற். 210 “நெல்லறுத்து நீங்கப் பெற்றது வயல், அழகிய இடமகன்ற அவ் வயலில் மறுபடியுழுத ஈரமுள்ள சேற்றில் விதைக்க விதையோடு சென்ற கடகப்பெட்டி (வட்டி) பற்பல மீன்க ளோடு திரும்பி வரும் புது வருவாயையுடைய ஊரனே உள்ள தும் இல்லதும் சேர்த்து அள்ளிவிட்டுப் பேசுதலும் விரைந்து செல்பவற்றை ஊர்ந்து செல்லுதலும் செல்வம் அல்ல. அவை யெல்லாம் செய்த வினையின் பயனாக வந்து வாய்க்கக் கூடியவை. சான்றோர் செல்வம் என்று போற்றக் கூடியது யாது எனில், தன்னைச் சேர்ந்தவர்களின் துன்பம் கண்டபோது அஞ்சி, நெகிழ்ந்துருகி, அதைப் போக்கி இனியராய் விளங்கும் தன்மையே, அதுவே உண்மையான செல்வம் ஆகும்” என்று