பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

75


“மென்மையான இயல்புடையவளே! மென்மையான இயல்புடையாய்! நல்ல நாளிலே நம்மை நீங்கிய குற்றமற்ற மாமையின் இயல்பை, நம் வலிய இயல்பினால் பொறுத்திருத் தலை அன்றி, அத் துன்பத்தைச் சொல்லுதற்கும் ஆற்றல் அற்றோம். சிறியோரும் பெரியோரும் வாழ்கின்ற ஊரில் ஒரு நாளேனும் இடையீடுபடாத செறிந்த நீரை உடைய வெள்ளத் தினது திண்ணிய கரையில்ே உள்ள பெரிய மரத்தைப் போல தீங்கில்லாத நிலையில் இருந்து இனிப் பலமுறை தலைவரை முயங்குவோமாக!” என்றாள் தலைவி தோழியிடம்.

147. ஒருயிரும் ஈருடலும் பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழு முகை வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு இருப்பின், இரு மருங்கினமே கிடப்பின், வில்லக விரலின் பொருந்தி; அவன் நல் அகம் சேரின், ஒரு மருங்கினமே.

- வில்லக விரலினார் குறு 370 “பொய்கையிலே உள்ள ஆம்பலினது அழகிய நிறத்தை உடைய கொழுவிய அரும்பில் வண்டுகள் இதழை திறக்கும் குளிர்ந்த நீர்த்துறைகளை உடைய ஊருக்கு உரியவனாகிய தலைவனோடு நாம் இருந்தால் இரண்டு உடலை உடை யோம். அவனோடு துயின்றால் வில்லை அகப்படப் பிடித்த வீரர்களைப் போல பொருந்தி அவன் தனது நல்ல அகத்தின் கண்ணே சேர்ந்தால் ஓர் உடலை உடையோம்.” என்று பரத்தை தலைவிக்கு உற்றார் கேட்கும்படிக் கூறினாள்.

148. பேச்சை நம்பமாட்டேன் உழுந்துடைக் கழுந்தின் கரும்புடைப் பணைத் தோள், நெடும் பல் கூந்தல், குறுந்தொடி, மகளிர் நலன் உண்டு துறத்தி ஆயின், மிக நன்று அம்ம - மகிழ்ந - நின் சூளே.

- ஒரம்போகியார் குறு 384

“தலைவனே! உழுந்தங்காயை அடித்தற்குரிய கழுத்து தேய்ந்த தடியைப் போல உள்ள, கரும்பு எழுதிய தொய்யிலை