பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்தொகை

  - * * - * * S AASAASAASAASAAAS

223. ஊடல் நீங்கியவர் உரை வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயற் கொண்ட ஞாங்கர் மலர் சூழ்தந்து, ஊர் புகுந்த வரி வண்டு, ஓங்கு உயர் எழில் யானைக் கனை கடாம் கமழ் நாற்றம் ஆங்கு அவை விருந்து ஆற்ற, பகல் அல்கி, கங்குலான், வீங்கு இறை வடுக் கொள, வீழுநர்ப் புணர்ந்தவர் தேம் கமழ் கதுப்பினுள் அரும்பு அவிழ் நறு முல்லை பாய்ந்து ஊதி, படர் தீர்ந்து, பண்டு தாம் மரீஇய பூம் பொய்கை மறந்து, உள்ளாப் புனர் அணி நல் ஊர! அணை மென் தோள் யான் வாட, அமர் துணைப்புணர்ந்து நீ ‘மண மனையாய் என வந்த மல்லலின் மாண்பு அன்றோபொதுக் கொண்ட கவ்வையின் பூ அணிப் பொலிந்த நின் வதுவை அம் கமழ் நாற்றம் வைகறைப் பெற்றதை?

கனலும் நோய்த் தலையும்,நீகனங் குழையவரொடு புனல் உளாய் என வந்த பூசலின் பெரிது அன்றோதார் கொண்டாள் தலைக் கோதை தடுமாறிப்பூண்ட நின் ஈரணி சிதையாது, எம் இல் வந்து நின்றதை?

தணந்ததன் தலையும், ‘நீ தளரியலவரொடு துணங்கையாய் என வந்த கவ்வையின் கடப்பு அன்றோஒளி பூத்த நுதலாரோடு ஒர் அணிப் பொலிந்த நின் களி தட்ப வந்த இக் கவின் காண இயைந்ததை? என ஆங்கு அளி பெற்றேம்; எம்மை நீ அருளினை விளியாது