பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


நிலைப் பால் அறியினும், நின் நொந்து நின்னைப் புலப்பார் உடையர், தவறு. அணைத் தோளாய் தீயாரைப் போல, திறன் இன்று உடற்றுதி காயும் தவறு இலேன் யான்.

மான் நோக்கி! நீ அழ நீத்தவன் ஆனாது நாணிலன் ஆயின் நலிதந்து அவன்வயின் ஊடுதல் என்னோ, இனி. இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம் என்னும் தகையது காண்டைப்பாய், நெஞ்சே பணி ஆனாப் பாடு இல் கண் பாயல் கொள. - கவி 87 “யாம் உன்னைக் காணும்போது அஞ்சுவோம். எனவே எம் கூந்தலைத் தொட வேண்டா. நீ விலகிப் போ” என்ற - சொன்னாள் தலைவி.

அதைக் கேட்ட தலைவன், “ஆராய்ந்தெடுத்த அணியை உடையாய், நான் தவறு செய்யவில்லை. அங்ஙனமாக நீ எவ்வாறு சினம் கொள்வாய்!” என்றாள்.

“உன் கண்ணை மறைத்த இமைக்குள் மறைந்த பொழுதே தோன்றாமல் போகின்றாய். ஆதலால் நீ கைவிடப் பெற்றாய். அதனை அறிந்திருப்பினும் அறியாதவரைப் போல் உன்னை நொந்து உன்னைப் புலக்கின்றவர் தவறு உடையவர்; உனக்கு ஒரு தவறு உண்டோ” என்றாள் தலைவி.

அதைக் கேட்ட தலைவன், அணை போலும் தோளை உடையவளே! தீய மக்களை வருத்துவது போல் ஒரு தீமை இல்லாதிருக்கவும் சினம் கொள்கின்றாய். நான் சினப்பதற்குக் காரணமான ஒரு தவறு உடையவன் அல்லேன், என்றான்

அதைக் கேட்ட தோழி, “மான் போன்ற பார்வையை உடையவளே, நீ அழும்படி உன்னைக் கைவிட்டவன் பரத்தமையில் அமையாமல் நாணம் இல்லாதிருப்பானால், மேலும் நலிதலைத் தந்து ஊடும் தன்மை என்ன பயன் தருமோ” என்றாள்.

அதைக் கேட்ட தலைவி, “நெஞ்சே! நீர் விழுதல் குறை யாத உறக்கம் கொள்ளாத கண் உறங்கும்படியாக, நான் இனிச் சொல் உடையோம் அல்லோம் என்று இவள் சொல்