பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

179


கிழந்த நின் மாலை உனக்கு உட்பகையாய் உன் பரத்த மையை எமக்குச் சொல்லும். அங்ஙனம் சொல்லாதபோது நீநாங்கள் வெறுக்கத்தக்க ப்ரத்தமை உடையாய் என்று ஒரு காலத்து நின்னை வெறுப்பவர் இல்லாத இடத்து நான் தீதிலேன் என்று தேற்றுவதற்கு எம்மிடம் வருவாயாக. அதனாற் பெற்றதென்?

தம் வயப்படுபவரைத் தேடிச் சுழலும் கண்களை உடைய பரத்தையரின் அழகிய மாலைகள் புணர்ச்சியால் குழைவித்த நின் பரந்த மார்பில் பூசிய இயல்பு அழிந்த சந்தனம் உனக்கு உட்பகையாய் அமைந்து நின் பரத்தமையை எமக்கு உரைக்கும். அங்ஙனம் உரைக்காத போது, நெஞ்சைச் சுடச் செய்து நீ மேற்கொண்ட பரத்தமையை வெறுப்பார் இல்லாத இடத்தே நான் பரத்தமையான தீமையுடையேன் அல்லேன்’ என்று எம் மனத்தில் ஊடல் உணர்த்துவதற்கு வருவாயாக. அதனால் பெற்றதென்? .

வரிசையான வளையையுடைய பரத்தையர் ஆடுகின்ற துணங்கைக் கூத்தில் நீ சென்று தலைக்கை கொடுத்தல் தொழிலை நின்னிடம் கொள்வதால் அவரது சிலம்பு சிக்கிக் கரையில் கிழிந்த உன்னுடைய நீல ஆடை உனக்கு உட் பகையாய் அமைந்து, உன் பரத்தமையை எமக்கு எடுத்துக் கூறாது போது நீ எப்படிப் பெரிய குறைகளைச் செய்தாலும் இக் குற்றங்களைச் செய்கின்றாய் எனச் சொல்பவர் இல்லாத இடத்து அடியில் விழுந்த பணிந்து எம்மை ஊடல் உணர்த்து வதற்கு வருவாயாக அதனால் பெற்றது என்?

ஆற்றினின்று மிகுந்து போய் விழுகின்ற நீரால் நிறையாத பெருங்கடல் போல் நின் அமையாத பரத்தமை மேலிடலால், நாள்தோறும் உன்னோடு புலவிகொள்ளும் தகுதியையுடைய பெண்டிரைத் தெளிவிப்பாய். பின்பு நாங்களோ உன் பொய்யை மெய்யாக எண்ணி உனக்குத் தோல்வி அடையா திருப்போம்! தோற்போம் அன்றோ!’ என்று எம் தங்கை யர்க்குச் சொல்வாயாக! எனப் பொய் கூறும் தலைவனிடம் தலைவி ஊடிக் கூடினாள். - -