பக்கம்:அறநெறி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 அறநெறி

மாறுபட்டுப் பொன்னையும் வேண்டா எனக் கூறி, “எல்லாவுயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து விருவும் மேவிற்றாகும்” என்ற தொல்காப்பிய நூற்பாவிற்கும் மாறாகப் போகத்தையும் வெறுத்து நிற்கின்றனர் முருக அடியார்கள். பொருளையும் பொன்னையும் போகத்தை யும் வெறுத்து, அவற்றிற்கும் உயர்வாக ஒளிரும் திருமுருகப் பெருமானின் அருளையும், அன்பையும், அறத்தையும் நாடி நிற்கிறார்கள். ஏனெனில் முருகப் பெருமான் வழங்கும் அருளும், அன்பும், அறமும் நிலைபேறுடைய பொருள்கள். எனவே நிலையாவுலகில் நில்லாத பொருளையும் பொன்னையும் போகத்தையும் வெறுத்து. நில்லாவுலகில் நிலைத்து நிற்கும் ஆறு முகப் பெருமானின் அருளையும் அன்பையும், அறத்தையும் வேண்டி நிற்கிறார்கள்.

எனவே, திருப்பரங்குன்றத்தில் உறையும் குமரவேளின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு நாம் சிந்திக்க வேண்டிய அறநெறிக் கருத்துகளை ஒருவாறு தொகுத்துக் காண்போம்.

“ஆசையே அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம்” என்பார் புத்தர்.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன். (341) என்பார் திருவள்ளுவர். பற்றுகள் படர்கொடியாப்ப் படர்ந்து சென்றுகொண்டிருக்கின்றன. படர் என்ற

சொல்லே துன்பத்தைக் குறிப்பதாகும் எனவே நில்லாத வுலகத்தின் நிலைமையினைச் சீர்தூக்கிப் பார்த்தால் முருகப்பெருமானின் அருளும் அன்பும் அறமுமே நம்மை என்றும் காக்க வல்லன என்பது பெறப்படும். பெறவே, திருப்பறங்குன்றில் அமர்ந்துறையும் முருகவேளினை முறையுற அறநெறிப் பற்றிப் படருவோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/30&oldid=586883" இலிருந்து மீள்விக்கப்பட்டது