பக்கம்:கண்ணகி தேவி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணகி தேவி

5

அவர்தம் பெற்றோர், அவர்களது திருமணத்தைப்பற்றிப் பேசி, முடிவிட்டுத் தம்மக்கட்கு மணமென்று ஊரார்க்கு அறிவித்தனர். பின்பு வயிரமணித்தூண்கள் நிரை நிரையாகப் பொருந்திய மண்டபத்தில், நீலப்பட்டு மேற்கட்டியின் கீழ் நிறுத்தின முத்துப்பந்தரில், உறவின் முறையார் சூழ்ந்திருக்க, இன்னிசை வாத்தியங்கள் இயம்ப, புரோகிதன் சடங்கு காட்டக் கோவலன் கண்ணகியை அங்கியங்கடவுள் சான்றாக மணந்தனன். உறவு மகளிர்கள் அட்டமங்கலம் ஏந்தி, மணமக்களிருவரையும், ‘பல்லாண்டு வாழ்க !’ என்று வாழ்த்தி, அரசனையும் வாழ்த்தினர்.

கோவலனும் கண்ணகியும், மலரும் அதன் நறுமணமும், அமிர்தும் அதன் தீஞ்சுவையும்போல உள்ளங் கலந்து, ஒருமித்து அன்புடன் இன்புற்று வாழும் நாளில், கோவலன் தாயாகிய பெருமனைக்கிழத்தி என்பவள், தன் மகனும் மருகியும் சேர்ந்து இல்லறத்தைச் செவ்விதாக நடத்திக் கைதேர்ந்து உயர்ச்சி பெற்று விளங்குதலைக் காண விரும்பி, வேறொரு மாளிகை நிருமித்து, அதில் வேண்டும் பண்டங்களை நிரப்பி, ஏவலாளரையும் நியமித்து, அவர்களை அங்கு வாழும்படி செய்தனள். அவர்கள் அம்மாளிகையில் இருந்து இல்லறத்திற்குரிய அன்பும் அருளுமுடைய வராய், இன்சொல் வழங்கி விருந்து போற்றியும், உத்தமர்க்கு உபகரித்தும், அந்தணரைப் பாதுகாத்தும், துறவிகளை எதிர் சென்று உபசரித்தும் இல்லறத்தை இனிதாக நடத்தி வந்தனர். இவ்வாறு சிலவாண்டுகள் கழிந்தன.

அந்நாளில் காவிரிப்பூம்பட்டினத்தில் சித்திராபதி யென்பாள் ஒரு நாடகக் கணிகை இருந்தாள். அவள் மகள் மாதவி என்பவள். அவள் ஊர்வசியின் அமிசமாய்ப் பிறந்தவள்; அவள் ஐந்தாண்டில் ஆடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/13&oldid=1411040" இலிருந்து மீள்விக்கப்பட்டது