பக்கம்:கண்ணகி தேவி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

கண்ணகி தேவி

வந்த ஒரு முதுமறையோனைக் கண்ட கோவலன், “ஐயரே, இங்கு வந்த காரணம் என்ன?” என வினவினான். மறையவன், “நான் திருவரங்கப்பெருமானையும் திருவேங்கட நாராயணனையும் கண்டு வணங்கிக் கதிபெறும் விருப்பத்துடன் புறப்பட்டவன், பாண்டி நாட்டின் வளங்களையும், பாண்டியனுடைய செங்கோலையும் போய்க் கண்குளிரக் கண்டு வருகின்றேன். இங்ஙனம் வந்த நான், இங்கிருந்து சிறிது இளைப்பாறுகின்றேன்,” என்றான்,

அவ்வளவில் கோவலன், “அப்படியாயின், மதுரைக்குச் செல்லுதற்குரிய செம்மையான வழியை எங்கட்கு விளக்கிச் சொல்லுக,” என வேண்டினான். முதுமறையோன், “ஐயோ பாவம்! வெயிலின் கொடுமை மிக்க இந்தக் கோடைகாலத்தில் மெல்லியலான இப்பெண்மணியுடன் வந்தீர்கள். வழி வருத்தம் அதிகமாயிற்றே ! பாறையும், பருக்கைக்கல்லும், வழி மயக்கமும், கானலும் மிகுந்த இந்தத் தொலையாத பாலை நிலவழியைத் தொலைத்துப்போய்க் கொடும்பாளுர், நெடுங்குளம் என்னும் இரண்டூர்க்கும் பொதுவான ஏரியின் கரையை முதலில் அடைய வேண்டும்; பின்னர் அதினின்றும் சூலம்போலமூன்று வழி பிரிந்து செல்லும்; அம்மூன்று வழிகளில் வலப்பக்கம் செல்லும் வழியோ, வாகை, மூங்கில், கடம்பு முதலிய மரங்களும், கற்றாழை கரிந்துகிடக்கும் இடங்களுமாய் இருக்கும். அவற்றையெல்லாம் கடக்து சென்றால், மலைவாழை, கமுகு, தெங்கு, பலா முதலிய மரங்களும், பல கிழங்கு வகைகளும், தானிய வனங்களும் மிகுந்த தென்னவன் சிறுமலை தோன்றும், அம்மலையை வலப்பக்கத்து வைத்து இடப்பக்கத்து வழியிற்சென்றால், மதுரையை அடையலாம்.

"இடப்பக்கத்து வழியோ, குளங்களோடும் பூஞ் சோலேகளோடும்பாலை நிலங்கள் பல இடைக்கிடந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/26&oldid=1407986" இலிருந்து மீள்விக்கப்பட்டது