பக்கம்:கண்ணகி தேவி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

கண்ணகி தேவி


யான் விரித்துரையேன் ; கடைசியாக நான் என் கணவரோடு பெற்றநற்செய்தியை நீ கேட்பாயாயின், அது நம்புந்தன்மையது அன்றாகலின், உனக்கு நகையைத்தரும்," என்று கனாத்திறம் கூறினாள்.

அப்பால் தேவந்தி கூறுவாள், "கண்ணகி, நீ கண்ட கனாத் தீயதென்று நினைந்து வருந்தவேண்டா, நீ கணவரால் வெறுக்கப்பட்டவளும் அல்லை; நீ முற்பிறப்பிற் கணவர்பொருட்டுச் செய்யவேண்டிய ஒரு நோன்பு தவறினை; அதனாலேயே இத்துன்பம் வந்தது. இது தீரும் பரிகாரம் ஒன்றுண்டு:காவிரி நதிகடலோடு கலக்கும் துறையில் நெய்தற்கானலிடத்தில் சோம குண்டம் சூரிய குண்டம் என்னும் இரண்டு தடாகமுள்ளன; அத்தடாகங்களில் மூழ்கிக் காமவேள் கோட்டத்தில் (மன்மதன் கோவில்)புகுந்து அத்தெய்வத்தை வழிபடுவோர், இப்பிறப்பில் நாளெல்லாம் தம் கணவரோடு பிரிவின்றியிருந்து இவ்வுலகத்தில் இன்பமுறுவர்; மறுமையிலும் தம் கணவரோடு உறைந்து மகிழ்ந்து வாழ்வர்; ஆதலால், நாமும் ஒரு நாள் அத்தடாகத்தில் மூழ்கி அத்தெய்வத்தைத் தொழுவோம்," என்று கூறினாள். அவள் கூறிய வற்றைக் கேட்ட கண்ணகி தேவி, "அவ்விதம் புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கித் தெய்வந்தொழுதல் நற்குடியிற்பிறந்த கற்புடை நங்கையர்க்கு இயல்பன்று; 'குலமகட்குக் கொண்டானிற் சிறந்த தெய்வம் வேறில்லை', என்ற நீதி அறிந்ததன்றோ?” என்று சொன்னாள்.

இவ்வளவில் மாலைப்பொழுது வந்தது. வீடு தோறும் மனையாட்டியர் மணி விளக்கேற்றி இல்லுறை தெய்வத்தை முல்லை மலரும் நெல்லும் தூவி வணங்கித் தங்களைக் கோலஞ் செய்து கொண்டனர். அப்போது கண்ணகியின் தாதி, அவ-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/20&oldid=1411048" இலிருந்து மீள்விக்கப்பட்டது