பக்கம்:கண்ணகி தேவி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

கண்ணகி தேவி

கள் புரிந்தும் அமர்ந்திருப்பர். சுருங்கச் சொல்லு மிடத்து இக்காலத்து ஓர் இராசதானிக்கு எவ்வெவ் வகையான நாகரிகங்களும் அமைப்புக்களும் அவசிய மென்று கருதப்படுகின்றனவோ, அவையெல்லாம் அந்நகரில் அக்காலத்தில் அமைந்திருந்தனவென்று சொல்லலாம். அந்நகரத்தை அத்தகைய நாகரிகம் பெறத் திருந்திய முறையில் அமைத்து அரசாண்டவன், இற்றைக்கு ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முன்னர் இருந்த வெற்றிவேந்தனகிய கரிகாலன் என்னும் சோழ சக்கரவர்த்தியாவன்.

கோவலன் வாழ்க்கை:

அக்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் பெருங்குடியர் மரபிலே பேரீகையாளன் மாநாய்கன் என்பான் ஒருவனிருந்தான். அவன் மகள் கண்ணகி என்னும் பெயரினள். அங்நகரத்திலே மாசாத்துவான் என்னும் மற்றொரு வணிகர் குலதிலகனும் இருந்தனன். அவன் குமாரன் கோவலன் என்னும் பெயரினன். கண்ணகி வளர்ந்து, கற்பால் அருந்ததியையும் பொற்பால் திருமகளையும் நிகர்த்து விளங்கினாள். கோவலன் அழகிற்சிறந்த ஆடவர் திலகனாய், நூல் பல பயின்று நுண்ணிய அறிவினனாய், வணிகத்துறையிலும் மற்றைய துறைகளிலும் தேர்ச்சிபெற்று, மிக்க புகழுடன் விளங்கினன். இவன் பளிங்குபோன்ற களங்கமற்ற உள்ளமுடையவன்; பிறர் கூறுகின்றவற்றை யெல்லாம் மெய்யென்றே கருதும் தூயகுணமுடையவன் தருமமும் தண்ணளியும் மிகுந்தவன். இத்தகைய கோவலனுக்குப் பதினாறாண்டும் கண்ணகிக்குப் பன்னீராண்டும் நடவாநிற்கையில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகி_தேவி.pdf/12&oldid=1411038" இலிருந்து மீள்விக்கப்பட்டது