பக்கம்:ஆனையும் பூனையும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கட்டு மரம் போகுது பார் ;
கடலில் நீச்சம் போடுதுபார் !
பட்டுப் பூச்சி யிறகைப் போலப்
பாய் விரித்துப் பாயுது பார் !
அலைகள் மேலே தாவுது பார்;
ஆட்டம் ஆடிக் காட்டுது பார் !
மலையைப் போல அலை வந்தாலும்
மலைக் காமல் தாண்டுது பார் !
தொடு வானம் தொட்டுக்கொண்டு
தூரத் திலே செல்லுது பார் !
அடை யாளம் தெரியா மல்
அத்தனை சின்ன தாகுது பார் !
கட்டு மரம் போகுது பார் ;
கடலை உழுது தள்ளுது பார் !
எட்டி எட்டி மீன் பிடிக்க
ஏலே லமே போடுது பார் !