பக்கம்:அறநெறி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. வாழ்வியற் நெறி

1. செய்வன திருந்தச் செய்

(Do well what you have to do)

உள்ளம், சொல், செயல் என்ற மூன்றும் மனிதனின் வாழ்வின் உயர்விற்கு உறுதுணையாக நிற்கின்றன. உள்ளம் நினைக்கிறது. அங்கிருந்து சொல் வெளிப்படு கின்றது. பின்னர் செயல் சிறக்கின்றது. எண்ணம் ஏற்றம் மிக்கதாக இருந்து, சொல் பயனுடையதாக இருந் தால், செயல் சிறக்கும். செயல் சிறக்க வேண்டுமானால் அச் செயலைத் திருந்தச் செய்ய வேண்டும். செயல் வெளிப்படும்போது திருத்தமும் செம்மையும் கொண்ட தாக இருக்கவேண்டும். ஒருவரின் மதிப்பு, அவர் எவ்வாறு செயலாற்றுகிறார் என்பதைப் பொறுத்திருக்கின்றது.

உலகப் பெரியோர் பலரை எடுத்துக்கொள்வோம். ஏசுநாதர், நபிகள் நாயகம், மகாவீரர் புத்தர், திருவள்ளுவர், திருமூலர், சங்கரர், இராமானுசர், நம்மாழ்வார் முதலான பெருமக்கள் பலர் இன்றும் நம்மால் நினைவு கூரப்படுகின்றார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்கள் ஆற்றிய செயலும், அந்தச் செயலை அவர்கள் ஆற்ற மேற்கொண்ட வழியுமே காரணங் களாகும்.

செய்யுங் தொழிலே தெய்வம், அதில் திறமைதான்

நமது:செல்வம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/66&oldid=586955" இலிருந்து மீள்விக்கப்பட்டது