பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


இன்று தெருவில் சென்றனள்” என்று பரத்தையிடமிருந்து

திரும்பி வந்த தனக்கு யாரையுமே தெரியாதென்றுரைக்கை

யில் தலைவி ஆத்திரத்துடன் இவ்வாறு உரைத்தாள்.

152. யாரையும் தெரியிரோ?

கண்டனென் - மகிழ்ந கண்டு எவன் செய்கோ? - பாணன் கையது பண்புடைச் சீறியாழ் யாணர் வண்டின், இம்மென இமிரும், ஏர் தரு தெருவின், எதிர்ச்சி நோக்கி, நின் மார்புதலைக்கொண்ட மாண்இழை மகளிர் கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பணி - கால் ஏமுற்ற பைதரு காலை, கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி, உடன் வீழ்பு பலர் கொள் பலகை போல - வாங்கவாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே.

- கொற்றனார் நற் 30 “இனியனே! பாணன் கையிலிருக்கும் மிக நல்ல சீறி யாழ் புதுவண்டு போல இம் என ஒலிக்கும். அழகிய தெருவில் எதிர் பார்த்து உன் மார்பைத் தமக்கிடமாக்கிக் கொண்டனர் மாட்சிமிக்க அணிகலன்களையுடைய பரத்தையர். அவர் ஆசை யால் இன்புற்று, நீ பிரிந்த போது வெய்யதாகக் கண்ணிர் வடித்தனர். கடலில் புயல்காற்று வீசியதால் கப்பல் கவிழ்ந்து விட்டது. துன்புற்ற காலமாகிய அப்போது கலக்க மடைந்த கப்பலோடு வீழ்ந்த பலரும் அங்கு மிதந்த பலகை ஒன்றைப் பிடித்துக் கொண்டனர். அப் பலகையை ஒவ் வொருவரும் தனித்தனி இழுப்பது போலப் பரத்தையர் ஒவ்வொருவரும் உன்னை இழுக்க இழுக்க, உன் செறிந்த துன்பத்தின் நிலையை யான் கண்டேன். கண்டு என்ன செய்ய வல்லேன்?” என்று, பரத்தையிடம் உறவாடி வந்த தலைவன் தனக்கு யாரையுமே தெரியாதென்று கூறுகையில் தோழி இவ்வாறுரைத்தாள்.

153. கள்வனைப் போல வந்தான்.

நெடு நா ஒள் மணி கடி மனை இரட்ட, குரை இலைப் போகிய விரவு மணற் பந்தர்,