பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : $89

அதனால் அப் பூவில் இருத்தலை அவ் வண்டு வெறுத்து அந் நீருடன் ஊடியது. நல்ல குணங்களை உடைய பகை ஒரு நாட்டுக்கு வந்ததாக அந் நாட்டை விட்டுக் குடிமக்கள் நீங்கிச் செல்வர். அங்குத் தன் நாட்டைக் காப்பவனின் குடைநிழல் ஊர்களை எண்ணியபடி தங்குவர். அவர்களைப்போல் அவ் வண்டு வேறு ஒரு பொய்கையைத் தனது இருப்பிடமாய்க் கொண்டு பழைய பொய்கையை எண்ணிச் சுழலும் காலம். அப்போது அந்த மன்னன் தன்னை எதிர்த்து வந்த பகையின் வலிமை கெடும்படி பகையை அழிக்க, அதனால் அக் குடி மக்கள் திரும்பத் தம் ஊரிடத்தே மீண்டு வருவர். அது போல், பெருகி வந்த அந்த நீர் வற்றியதால் மீண்டும் திரும்பி வந்து அந்த வண்டு அந்தத் தாமரை மலரில் பறத்தலை விட்டு இளைப்பாறும். இத்தகைய பரந்த புனலைக் கொண்ட நல்ல ஊரனே -

தீயைப்போல் நிறம் உடைய இதழ்கள் வாடி உதிரப் பரத்தையரைப் புணர்ந்ததற்குச் சான்றாய் எமக்கும் மாலையை உடையவனாய் எம் வீட்டில் யாம் இருக்கின்ற இடத்தே வருதல் இவளது நலம் நாம் பிரியும் காலத்தில் நிறம் கெட்டுப், புணரும் காலத்துப் பரத்தையர் புகழும் பொலிவு பெற்று நாம் மனத்தில் கொண்ட கருத்தாய் இருக்கும் என்று எண்ணி இருக்கும் தன்மையோதான்!

மற்றவர் சொல்லும் அலருக்கு நாணி மறைத்த காம நோய் ஒழுக்கத்து எல்லையைக் கடக்க, பிறர்-பரத்தையர் - கூந்தலில் மணம் நாறும் மார்பையுடையவனாய் எம் வீட்டில் யான் இருக்கும் இடத்தில் வருவது, இவள் பெண்மை நலம் கதிரவனைக் கண்டு அலர்ந்த தாமரைப்பூ அந்தக் கதிரவன் மறையும் அளவில் குவிந்தாற்போல் என் தொடர்பு நீங்கின் வறிதாகிவிடும் என்னும் தன்மையோதான்!

முடியில் பொருந்துகின்ற மலர் மாலையைப்போன்று யான் வாட, நீ உம் பரத்தையர் தொடியால் தோற்றுவிக்கப் பட்ட வடுவைக் காட்டி இங்கு எம் வீட்டில் யாம் இருக் கின்ற இடத்துக்கு வரும் தன்மை, இவள், மழை பெய்தால் வளம் பெற்று, பெய்யாது போனால் உலரும் நிலத்துக்கு, அம் மழை பெய்து விளைவித்தும் பெய்யாது கெடுத்தும் போமாறு