பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்83



97. மாணிக்கவாசகருக்கு அந்தக் குதிரையோட சம்பந்தப் பட்ட பரி-ங்கிறதே வேற... டோண்ட் மிக்ஸ்ப் தட்- அதுக்கு இதுல சம்பந்தமே இல்லை. குதிரை என்கிற சொல் ஷேக்ஸ்பியர் யூஸ் பண்ணும்போது and they brought a horse-ன்னா அது ஆர்டினரி மீனிங். கொண்டு வந்து, பிறகு பார்க்குறான். What a noble steed it was - எப்பேர்ப்பட்ட குதிரை அது... தேசிங்குராஜன் குதிரை. அது மாதிரி. அதுபோல எந்தச் சொல்ல எந்த இடத்தில் பயன்படுத்தணும்னு தெரிஞ்சு பயன்படுத்தினான் கவிஞன். அந்தச் சொல்லை நீங்க மாற்றினால் அதுக்கு உயிர் போயிடும். இப்ப- உணர்தல், அறிதல், தெரிதல், தெளிதல், சிந்தித்தல். எத்தனையோ சொற்கள் இருக்குது. கும்பகர்ணன் சொல்றான், நீ பண்ணலாமாடா இந்தத் தப்பை? ஆயிரமறைப் பொருள் உணர்ந்தறிவமைந்தாய் தீயினை நயந்த செய்த வினை செய்தாய்’ ஆயிரமறைப் பொருள் உணர்ந்து அறி வமைந்தாய், அறிந்து அறிவமைந்தாய் - என்றால் என்ன அர்த்தம். பாடலை அறிதல் என்பது நியூரானின் பங்ஷன் அதப் ஃபாலோ பண்ணனும்கிற அவசியமில்லை. உணர்தல் என்பது இருதயத்துடைய function மற்றவனெல்லாம் வேதத்தை அத்யயனம் பண்ணினான், காட்டுக் கத்தல் கத்தறதுக்கு. இராவணன் உணர்ந்தான். வேதப் பொருளை உணர்ந்தான். ஆகையினால. அறிந்து அறிவமைந்தாய் என்பதை எடுத்துப்புட்டு, அறிந்தான் என்று போட்டா கம்பன் செத்துடுவான். இந்த நுணுக்கத்தை எவன் கண்டு பிடிச்சான்? பாரதி கண்டு புடிச்சான். எங்க கொண்டு போய் வைத்தான்? கோயில் பூசை செய்வோன் சிலையைக் கொண்டுவிற்றல் போலும், வாயில் காத்து நிற்போன் வீட்டை வைத்திழத்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/91&oldid=481632" இலிருந்து மீள்விக்கப்பட்டது