பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



உளறுகிறாள். கொண்ணுட்டாங்கிறதை அவள் சொல்லவில்லை; கொலை புரிந்தனரே என்று சொல்ல வருகிறாள். அதைக்கூட எப்படிச் சொல்வது என்று சொல்லமுடியமால் மென்னு முழுங்கிக்கிட்டுச் சொல்கிறாள். அப்படிச் சொல்றதை incommunicable-னு சொல்றது பொருத்தம்.

50. நம்மாழ்வார் வந்து. அவன், இவன். உவன் என்று சொல்றாரே... அது எப்படி..?

அது தத்துவ விளக்கம். அவன், இவன், உவன் இருக்கே- அதற்குப் பின்னால, நம்மாழ்வார், உளந்தனில் உளனவன் என்கிறார். இவை அவனுடைய உருவங்கள். உளந்தனில் உளனவன் இவ்வுருவுகள் அவை. ஆகையினாலே இது ஒரு மாபெரும் தத்துவம். அதை அவர் அழகாக எளிமையாகச் சாதாரண நம் மாதிரி ஆட்களுக்கும் விளக்கம் சொல்றதுதான் அந்த அவன் இவன் உவன் பாட்டும். உளந்தனில் உள்ளவன்-பாட்டும். இவ்வளவு பெரிய கருத்தை அழகான பொயட்ரியில் வைத்தார்களே அதுதான் திறமை.

51. மொழி உடையிற மாதிரி அந்த விஷயத்தை அவர் பொயட்ரியில சொல்லும்பொழுது, ரெகுலரா வருகிற பொயட்ரி ஸ்ட்ரக்சர்-ல இருந்து அந்த இடம் வரும் பொழுது- அவன், இவன், உவன் என்று வரும்பொழுது ஏதோ ஒரு இடத்திலே உடையிற மாதிரி இல்ல...?

அதாவது பின்ன முன்ன வந்த வரிகளிடத்தில், - முன்னே சிலப்பதிகாரத்திலே சொன்னேனே! - அது மாதிரி, சாவக நோன்பிகள், அது மாதிரி தனியா நின்றது என்றால் நீங்க சொல்வது சரி. இந்த அவன், இவன் உவன் அடிகள் எல்லாம் முன்னும் பின்னும் எதுகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/64&oldid=481716" இலிருந்து மீள்விக்கப்பட்டது