பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 T) ஆரணிய காண்ட ஆய்வு

திருப்பிப் பார்க்க வேண்டும். சிங்கமோ, பின்னால் உள்ளதைப் பார்க்க உடலைத் திருப்ப வேண்டிய தில்லை; தலையை மட்டும் திருப்பிப் பின்னால் உள்ளதைப் பார்க்க முடியும். இதற்கு அரிமா நோக்கு - சிங்க நோக்கு என்று பெயர் கூறுவர். ஒரு பாடலில், நடுவில் இருந்து கொண்டு முன் பகுதிக்கும் பின் பகுதிக்கும் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளும்படியாக உள்ள சொல்லின் அமைப் புக்குச் சிங்கநோக்கு எனப் பெயர் கூறுவர். பவணந்தி முனிவர் இதை 'அரிமா நோக்கம் (18) என நன்னூலில் குறிப்பிட்டுள்ளார்.

இராமன் முன்னால் வழியைப் பார்த்துச் செல்வ தல்லாமல், சீதையின் காவல் கருதிப் பின்னாலும் திரும்பித் திரும்பிப் பார்த்துச் செல்கிறான். விராதன் என்னும் அரக்கன் சீதையைத் தூக்கிச் சென்றதை அதற்குள் மறந்து விட முடியாதன்றோ?

கால் கோவும் கை கோவும் :

இராமனைக் கண்ட இந்திரன், இராமனைத் திருமாலா கவே மதித்து பலவாறு போற்றி வணங்கினான். இராமன் வில் ஏந்திக் கால் நோவத் தேவன்ரக் காக்க வந்தானாம். கை நோவக் கடல் கடைந்து அமிழ்தம் அளித்தானம். “சிலை ஏந்தி வந்து எம்மைச் சேவடிகள் நோவக்

காவது ஒழியின் பழி பெரிதோ” (28) "தடவரையே மத்தாகத் தாமரைக் கை கோவ ஆழி கடைந்து அமுதம் எங்களுக்கோ ஈந்தாய்' (29)

இங்கே திருமால் கடல் கடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. கம்பரே வாலிவதைப் படத்தில் வாலி கடல் கடைந்து தேவர்க்கு அமிழ்தம் ஈந்ததாகத் தாரையின் வாயிலாகச் சொல்லியுள்ளார். -