பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 C ஆரணிய ಆrಣಿ - ஆய்வு -

விராதனுக்குப் பூனையும் சீதைக்குக் கிளியும் ஒப்பாக்கப்

பட்டுள்ளன. பூனையின் வஞ்சகச் செயல்களை விரிக்கின்

விராதனின் பொல்லாக் குணத்தை விவரித்த தாகும்.

வஞ்சகனை ஆழ்சாடபூதி என்பர்; அவனுக்குப் பூனையை ஒப்புமையாகக் கூறுவர். பூனை போல் அவன் ஒர் ஆழ்சாடபூதி, (கால்நகங்களை மடக்கிக் கொண்டு நடந்து வருவது தெரியாமல் வரும்) பூனையைப் போல் தெரியாமல் வந்து திருடிக்கொண்டு போய் விட்டான், 'பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்’ என்னும் உலகியல் மொழிகள் பூனையின் பொல்லாமையை விளக்கும்.

பாரதிதாசன் இசையமுது என்னும் நூலில் பூனையைப் பாடியிருப்பது வருக;

“பூனை வந்தது பூனை - இனிப்

போனது தயிர்ப் பானை! - பட்டம் பகல்தான் இருட்டும் - அது. பானை சட்டியை உருட்டும் சிப்டுக் குருவியும் கோழியும் இன்னும் சின்ன உயிரையும் வஞ்சித்துத் தின்னும் பூனை வந்தது பூனை” என்பது காண்க. வீட்டில் வளர்க்கும் விலங்குகளுள் ஆடும் மாடும் மரக்கறி உணவே கொள்ளும்; நாயும் பன்றியும் மரக்கறி, ஊன் இரண்டும் உட்கொள்ளும் பூனையோ, மரக்கறி உணவைத் தொடாது. புலால் தொடர்பான உணவுப் பொருளையே உண்ணும். பால் மாட்டிலிருந்து கிடைப்பதால் பாலும் தயிரும் புலால் உணவே. சிலர் நோன்பு நாளில் பால் அருந்துவதில்லை. பூனை பால் தயிர், இவை கலந்த சோறு போன்றவற்றையும், சிட்டுக் குருவி, கோழி, கிளி முதலியவற்றையும் உண்ணும். இதிலிருந்து, பூனை கொலைக்கார விலங்கு என்பது புலனாகும்,