பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 33

"மானே அனையாளொடு மைந்தனை அப்

பூநேர் பொழிலின் புறனே நிறுவா ஆணேறு என ஆள் அரியேறு இது எனத் தானே அவ் அகன் பொழில் சாருதலும் (23)

மானே அனையாள் - மான் போன்ற சீதை. மருளும் சீதைக்கு மருளும் மான் ஒப்புமை. மைந்தன் = இலக்கு மணன்; இது இரு பொருள் உடையது. மைந்து என்றால் வலிமை; வலிமை உடைய இலக்குமணன் மைந்தன் எனப் பட்டான். இது ஒரு பொருள். மற்றொன்று இலக்குமணன் சீதையைத் தாயாக மதித்து மகனைப்போல் பணிந்து பணிவிடை செய்து வருகிறான் ஆதலின், மகன் என்ற பொருளும் மைந்தனுக்குக் கொள்ளலாம்.

ஆன் ஈறு - காளை மாடு. அரி ஏறு = ஆண் சிங்கம். இரண்டு உவமைகள் ஏன்? இராமன் மிடுக்காக நடை போடு வதற்கு ஆன் ஏறு உவமை. ஈண்டு,

"புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்

ஏறுபோல் பீடு நடை' (59) என்னும் குறளில் உள்ள ஏறு போல் பீடு நடை என்னும் பகுதி ஒப்பு நோக்கத் தக்கது. ஏறு என்பதற்குச் சிங்கம் எனப் பரிமேழலகரும், ரிழ்சபம் எனப் பரிதியாரும் உரை கூறியுள்ளனர். ஏறுநடை = அசைவும் தலை எடுப்பும் பொருந்திய நடை என்று மணக்குடவர் விளக்கம் அளித்து உள்ளார். சேவல் கோழி தலையை ஆட்டி அசைத்து நிமிர்த்தியும் அமர்க்களமாக நடப்பதாக ஆங்கிலப் பாடல் ஒன்றில் கூறப்பட்டுள்ளதும் இங்கே 'பீடுநடை யோடு ஒத்து நோக்கத் தக்கது.

அடுத்தது சிங்கநடை, மற்ற விலங்குகள் பின்னால் உள்ளதைப் பார்க்க வேண்டுமெனில் உடல் முழுவதையும்