பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. அகத்தியப் படலம்

இராமனும் அகத்தியரும் தொடர்பு கொண்டதைப் பற்றிக் கூறுவதாதலின் இப்படலம் இப்பெயர் தரப்பட்டது.

சரபங்கரின் தவக் குடிலிலிருந்து புறப்பட்ட இராம இலக்குமணர் சீதை ஆகிய மூவரும் பல காடு மலைகளைக் கடந்து தண்டக வனத்தை அடைந்தனர். அங்கிருந்த பாலகில்லர், முண்டர், மோனர் முதலிய தவ முனிவர்கள் வரவேற்றனர்.

இராமனைக் கண்ட முனிவர்களின் மகிழ்ச்சிக்குக் கம்பர் நான்கு விதமான உவமைகளை நயம்பெறக் கூறியுள்ளார். அவை ஒவ்வொன்றாய் வருக!

1. அரக்கர்களின் கொடுமையால் வருந்தும் முனிவர்கள், இராமனைக் கண்டதும், கனல் கக்கும் காட்டில் வற்றிய மரங்கள், அமிழ்தம் கலந்த தண்ணீர் பெற்றால் எவ்வாறு தழைக்குமோ அவ்வாறு உள்ளம் தழைத்து மகிழ்ந்தனராம்.

'கனைவரு கடுஞ்சினத்து அரக்கர் காய ஓர்

வினை பிறிது இன்மையின் வெதும்பு கின்றனர் அனல் வரு கானகத்து அமுது அளாவிய புனல்வர உயிர்வரும் உலவை போல்கின்றார்” (4) அரக்கர் காய்வதால் ஒன்றும் இயற்ற முடியாமல் உள்ளனராம் முனிவர்கள். உலவை = வற்றிய மரம்.

2. அச்சத்தால், கடவுள் பெயரைச் சொல்லாமல் அரக்கர்களின் பெயரையே மாறி மாறி உருவேற்றிக் கொண்டிருந்த முனிவர்கள் இராமனைக் கண்டதும் கலக்கம் நீங்கினர். தீ பற்றிய காட்டில் கன்றை விட்டு வந்த தாய்ப்