பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்பரின் காலம்

கம்பர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டினர் எனச் சிலரும் பன்னிரண்டாம் நூற்றாண்டினர் எனச் சிலரும் கூறு கின்றனர். எனது கொள்கை இரண்டாவதேயாகும். (இது குறித்து, எனது 'அம்பிகாபதி காதல் காப்பியம்' என்னும் காப்பிய நூலின் முன்னுரையில் விரிவாக எழுதியுள்ளேன்).

எனது ஆரணிய காண்ட ஆய்வு என்னும் இந்த நூலுக்கும் அன்பர்களின் ஆதரவையும் வாழ்த்தினையும் வணங்கி வேண்டுகிறேன்.

உதவி புரிந்துள்ள புதுவை அரசுக்கும், யான் கம்பராமாயண விளக்கம் எழுதத் தூண்டிய புதுவைப் புலவர் உயர்திரு கம்பவாணர் அ. அருணகிரி அவர்கட்கும், இந்த நூலை நன்முறையில் வெளியிட்ட புத்தகவித்தகர் உயர்திரு வானதி ஏ. திருநாவுக்கரசு அவர்கட்கும் மிக்க நன்றி செலுத்துகிறேன். மற்றும், அச்சிட்டுத் தந்த சிதம்பரம் சபாநாயகம் அச்சகத்தாருக்கும் என் நன்றி உரியது. வணக்கம்.

சுந்தர சண்முகன்