பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ) ஆரணிய காண்ட ஆய்வு

இராமன் வரலாற்றுக்குப் பிற்பட்டது கண்ணன் வரலாறு என்னும் கால இடைவெளி பாராது, தோளில் சுமந்த ஒரு செயலைப் பொதுத் தன்மையாகக் கொண்டு அமைதி காணல் வேண்டும்.

இந்த உவமையில் மற்றொரு பொருத்தமும் உள்ளது. இராமனும் கண்ணனும் கரு நிலத்தினர்; இலக்குமனும் பல ராமனும் கரு நிறத்திற்கு மாறுபட்ட நிறத்தினர்; அதாவது, இலக்குவன் பொன்னிறத்தனாம் - பலராமன் வெண்ணிறத்தனாம்; ஐரோப்பியரை நாம் வெள்ளைக்காரர் என்கிறோம் - உண்மையில் வெள்ளையாகவா இருக்கி றார்கள்? ஒருவகைப் பொன்னிறமாகத்தானே உள்ளனர்!

கீழே விழுந்துள்ள சீதை, இராம இலக்குமணரை விராதன் துரக்கிச் செல்வதைப் பார்த்து, சேவல் அன்னத்தைப் பிரிந்த பெடை அன்னம்போல் தவித்தாள்.

'சீதை சேவல் பிடியுண்ட

சிறை அன்னம் அனையாள்’’ (38)

நகும்

பின்னர்ச் சீதை விராதனை நோக்கி, அவர்களை விட்டு விடு - என்னை வேண்டுமானால் விழுங்கி விடு என்றாள். சீதையின் துயரைக் கண்ட இலக்குவன், இனியும் காலம் கடத்தக் கூடாது என இராமனிடன் கூறினான். இராமன் சிரித்தபடியே, இவனைக் கொல்லுதல் எளிய செயலே - அது ஒரு பெரிதன்று என்றான்.

'சாகல் இன்று பொருளன்று

என நகும் தகைமையோன்” (41) இராமன் எளிமை பற்றிச் சிரிக்கும் இயல்பு முன்னரும் கூறப்பட்டுள்ளது.