பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார் ☐ 11

சிலர் திருமணம் போன்ற நாளில் இன்றி, வெற்று நாளில் பலர் வரினும் மகிழ்வது உண்டு.

அதியமானை ஒளவையார் பாடியுள்ளார்: ஒரு நாள் மட்டுமன்று. இருநாள் மட்டுமன்று. பலநாள் வரினும் - அடிக்கடி வரினும் பலரோடு வரினும் உணவு தந்து பரிசளிப்பான்.

முதல்நாள் வாழையிலை - இரண்டாம் நாள் தையல் இலை . மூன்றாம் நாள் கையிலே - என்ற மாதிரியில் இல்லை. பலநாள் பலரோடு செல்லினும் முதல்நாள் போலவே எப்போதும் வரவேற்பான்.

ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ

(101: 1, 2, 3)

என்பது, அதியமானை ஒளவையார் பாடிய புறநானூற்றுப் பாடல். ‘தமரெலாம் வர உவந்தனைய தன்மை’ என்னும் பகுதி புறநானூற்றுப் பாடலோடு ஒப்பிடற்பாலது.

மூவரும் வந்தது முனிவர்க்குச் செலவாகத் தெரிய வில்லையாம் - உதவியாக இருந்ததாம். இதைத்தான், “இவண் அடைந்து ‘உதவு’ கொள்கை” என்பது உணர்த்துகிறது. தேவரும் மற்றும் எவ்வுலகத்தாரும் வந்தால் பெறுவது போன்ற மகிழ்ச்சி உண்டாயிற்றாம்.

“எமரின் யார் தாம் முயன்றனர்” என்பதற்கு, இங்கே உள்ள எங்களைப் போல் வேறு யார் உங்களைப் பெறத் தவம் செய்தனர் - ஒருவரும் இல்லை - எனப் பொருள் கொள்ளலாம். இங்கே ‘எமரின்’ என்பதில் உள்ள ‘இன்’ ஐந்தாம் வேற்றுமை உருபு ஒப்புப் பொருளில் உள்ளது. எங்களைக் காட்டிலும் வேறு யார் செய்தனர்? எனப்