பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார் ☐35


சிவபிரகாச அடிகளார், பிரபுலிங்க லீலை என்னும் நூலில், சிவன் கடைந்ததாகச் சொல்லியுள்ளார்.

பின்னர் இந்திரன் சரபங்க முனிவரிடம் விடைபெற்றுச் சென்று விட்டான்.

மகிழ்ச்சிக் கண்ணிர்:

முனிவன் இந்திரன் போய்விட்டதன் காரணத்தை உணர்ந்து,பின் இராமனை வரவேற்றான். இராமன்வணங்க, உணர்ச்சி மேலிட்டால் அழுதான் முனிவன்.

“போனவன் அகநிலை புலமையிஉணர்வான்
வானவர் தலைவனைவரவெதிர்கொண்டான்
ஆனவன் அடிதொழ அருள்வர அழுதான்.
தானுடை இடவகை தழுவினன் நுழைவான்”

(33)

போனவன் = இந்திரன். வானவர் தலைவன் = திருமாலாகிய இராமன். ஆனவன் = இராமன். தழுவினன் நுழைவான் = சரபங்க முனிவன்.

போன இந்திரனது அகநிலையாவது: இராமன் வந்திருப்பதால் நாம் இங்கே இருப்பது சரியன்றுஎன்பதாகும். அதைப் புலமையால் உணர்வது என்பது, நுண்ணறிவால்-உய்த்துணர்வால் அறிவது. ஆனவன் அடி தொழ = இராமன் முனிவனின் அடிகளைத் தொழுதான். தான் செல்ல விரும்பும் திருமாலின் இடத்தை விரும்பி நுழைய இருப்பவனாகிய முனிவன், அருள் வர அழுதான் = அன்பு மிக-அருள் பெருக அழுதான்.

முனிவன் அழுதான் என்றால், கட்டாயம் கண்ணிர் வந்திருக்கும். இது மகிழ்ச்சிக் கண்ணிராகும். இதனை வட மொழியில் ‘ஆனந்த பாஷ்யம்’ என்பர். ஆங்கிலத்தில் Tears of Joy எனலாம். இது இன்னும் உயர்தமிழ் நடையில் ‘உவகைக் கலுழ்ச்சி’ எனப்படும்.