பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்

சரபங்கன் என்னும் முனிவன் பிறப்பு நீங்கி வீடுபேறு அடைந்ததைப் பற்றிய தாதலின் இப்படலம் இப்பெயர்த் தாயிற்று.

வேறு ஒலைச் சுவடிகள் சிலவற்றில், சரவங்கன் பிறப்பு நீங்கு படலம், சரபங்கப் படலம், சரபங்கர் பிறப்பு நீங்கு படலம் என்றெல்லாம் பெயர்கள் உள்ளன.

விராதன் சென்ற பின், சீதையுடன் இராம இலக்கு மணர் சாபங்க முனிவர் இருந்த குடிலை நெருங்கினர்.

கண்ணாயிரம்

அப்போது ஆயிரம் கண்கள் உடைய இந்திரனும் அங்கு வந்தான்.

"செவ்வேலவர் சென்றனர் சேரல் உறும் அவ்வேலையின் எய்தினன் ஆயிரமாம் தவ்வாது இரவும்பொலி தாமரையின் வெவ்வேறு அலர் கண்ணினன் விண்ணவர் கோன்’(2) செவ் வேலவர் - இராம இலக்குமணர். ஆயிரமாம் கண்ணினன் = விண்ணவர்கோன் = இந்திரன்.

இந்திரனுக்கு ஆயிரம் கண்கள் உண்டான வரலாறு தெரிந்ததே. பொதுவாகக் கண்ணுக்குத் தாமரை மலரை ஒப்பிடுவது மரபு. தாமரை மலர் இரவில் குவிந்துவிடும். ஆனால் இந்திரன் கண்களோ மூடுவதில்லை. ஆதலின், இரவிலும் மலர்ந்திருக்கும் தாமரை இருந்தால் எப்படியோ அப்படிப்பட்ட கண்களை உடையவன் என்றார்.