பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் () 37

என்பது செயிற்றிய நூற்பா. இதில் கூறப்பட்டுள்ள அனைத்தும், தொல்காப்பியர் கூறியுள்ள நான்கனுள் அடங்கும் என உரையாசிரியர் இளம்பூரணர் கூறியுள்ளார்.

இது சரியே.

தொல்காப்பியத்தின் மற்றோர் உரையாசிரியராகிய

பேராசிரியர் என்பவர், தொல்காப்பியர் கூறாத உவகை (மகிழ்ச்சி) என்பதும் அழுகையின் காரணம் எனத் தமது உரையில் கூறியுள்ளார். இதற்கு எடுத்துக் காட்டாகப் புறநானூற்றுப் பாடல் ஒன்றின் பகுதியையும் தமது உரையில் தந்துள்ளார். இப்பகுதி உள்ள அடிகளையும் பழைய உரையாசிரியர் எழுதியுள்ள உரையையும் இனிக்

&;mróõúrutrup:

'எறிந்து களம்படுத்த ஏங்துவாள் வலத்தர்

எங்தையொடு கிடந்தோர் எம் புன்தலைப் புதல்வர்

இன்ன விறலும் உளகொல் நமக்கென

மூதில் பெண்டிர் கசிந்து அழ...” என்பது பாடல் பகுதி. (19:12-15) இனிப் பழைய உரை

வருமாறு:

போர்க் களத்தின் கண்ணே வீழ்த்த ஏந்திய வாள் வெற்றியை உடையோராய் எம்தலைவனோடு கிடந்தார். எம்முடைய புல்லிய தலையையுடைய மைந்தர், இப் பெற்றிப்பட்ட வென்றியும் உளவோ நமக்கு என்று சொல்லி முதிய மறக்குடியில் பிறந்த பெண்டிர் இன்புற்று உவகையால் அழ'- என்பது உரைப்பகுதி.

எனவே, இந்தப் பாடலில் உவகைக் கலுழ்ச்சி இடம் பெற்றிருப்பதைக் காணலாம். (கலுழ்ச்சி = அழுகை).

மாணிக்க வாசகரும் திருவாசகம் அன்னைப் பத்தில் மகிழ்ச்சிக் கண்ணிர் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்; வருக வருக;