பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் . 67

நின்றவன், அழுத கண்ணான், இசை கொண்டான் ஆகியவை அகத்தியனைக் குறிக்கின்றன.

இந்தப் பாடலிலும் மகிழ்ச்சிக் கண்ணிரின் தொடர்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் காலத்தில் பல இடங்களில், ஆங்கிலத்தில் Welcome என்ற தொடரையும், தமிழில் நல்வரவாகுக! என்ற தொடரையும், காண்கிறோம். பல நூற்றாண்டுகட்கு முன்பே, நன்று வரவு' என்னும் வரவேற்பு உரையைக் கம்பர் நமக்குக் கற்றுக் கொடுத்துச் சென்றுள்ளார்.

அகத்தியன் இசை (புகழ்) கொண்டவனாம். எப்படி? தமிழ் இயம்பி இசை கொண்டவனாம். தமிழ் எத்தகையது? என்றும் உள. தென் தமிழாம். - -

கிரேக்கம், இலத்தீன், சமசுகிருதம், தமிழ் முதலிய மொழிகள் சில மிகவும் பழமை வாய்ந்தவை. இலத்தின், சமசுகிருதம் முதலிய மொழிகள் பேச்சு வழக்கு இழந்து ஏட்டளவில் உள்ளன. ஆனால், தமிழ், எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் அழியாமல் உள்ளது. இதை, 'மனோன்மணியம் என்னும் நாடகக் காப்பியத்தின் தமிழ்த் தாய் வாழ்த்தில் பெரும்புலவர் சுந்தரம் பிள்ளை,

"ஆரியம்போல் உலகவழக்கு அழிக்தொழிந்து சிதையாஉன் சீரிளமைத் திறன்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே” என்று பாடியுள்ளார். இது முன்பும் கூறப்பட்டுள்ளது.

இந்தக் காலத்தில் தமிழின் தொன்மை நிலையையும் தூய்மை நிலையையும் கெடுக்கும் முயற்சி தொடர்ந்து கொண்டுள்ளது. தமிழ் தென் தமிழ் எனப்பட்டது. சம்சுகிருதம் வடமொழி எனப்பட்டதால் மட்டும் தமிழ் தென்தமிழ் என்று சொல்லப்பட்டதாகக் கருதலாகாது. அரப்பா-மொகஞ்சதரா-சிந்து வெளி நாகரிகம் இந்தியாவின்