பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் ( 91

பழுவம்=தொகுதி. கண்பனி= கண்ணிர்-தேன் கசிவு. ஆறு இயற்கையாக இரைச்சலிட்டு ஓடுவதற்குப் புலவன் தானாக ஒரு காரணம் குறித்து ஏற்றிச் சொல்லியிருக்கும் இந்த அமைப்பு தற்குறிப்பேற்ற அணியாகும்.

இப்படி ஒரு கற்பனையை இளங்கோவும் சிலம்பில் செய்துள்ளார். வையை என்னும் பெண், கண்ணகிக்கு வரப்போகும் துன்பத்தை முன்னேயே அறிந்தவள் போல், மலராடையால் தன்னைப் போர்த்துக் கொண்டு கண்ணிறை நீரை மறைத்து அடக்கிக் கொண்டாளாம்.

"வையை என்னும் பொய்யாக் குலக்கொடி

தையற்கு உறுவது தான் அறிந்தனள்போல் புண்ணிய நறுமல ராடைப் போர்த்துக் கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி (13:170-73)

என்பது பாடல் பகுதி. ஆற்றுநீர் மேலே அளவற்ற மலர்கள் அடித்துக் கொண்டு வருவதால் நீர் இருப்பதே தெரிய வில்லை யாதலின் மலராடை போர்த்துக் கொண்டது போல் தெரிகிறதாம். (பல மலர்களின் வடிவம்போல் அச்சு குத்தியிருக்கும் நம் போர்வையை நினைவு செய்து கொள்ளல் வேண்டும்). கண்நிறை நெடுநீர் = தன்னிடத்தில் நிறைந் துள்ள மிக்க நீர். கண் என்பதற்கு இடம் என்னும் பொருள் உண்டு; கண் நிறை நெடுநீர் = கண்ணிலே நிறைந்த நீர் - இவ்வாறு இருபொருள் அமைய உள்ளது. -

வையை ஆறுதான் இப்படி என்றால், அகழிப் பகுதியில் உள்ள குவளையும் ஆம்பலும் தாமரையும், கண்ணகியும் கோவலனும் துன்பம் உறப் போகிறார்கள் என்பதை ஐயம் இன்றி முன்கூட்டி அறிந்தனபோல், வண்டுகளின் இசையாகிய இரங்கல் பண் இசைத்துக் கண்ணிர் கொண்டு காலுற நடுங்கினவாம்: