பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 ஆரணிய காண்ட ஆய்வு

இங்கே, அதிசயக் கோவையில் உள்ள ஒரு சொல் விளையாட்டு நினைவிற்கு வருகிறது. அது,

“ஐந்தாம் குலத்தவர் பார்ப்பாரைச் சேரல் அதிசயமே”

என்பதாகும்.

ஐந்தாம் குலத்தவர் = ஆதிதிராவிடர். பார்ப்பார் = பிராமணர். ஆதிதிராவிடப் பெண் பார்ப்பன ஆணையோ அல்லது ஆதிதிராவிட ஆண் பார்ப்பனப் பெண்ணையோ சேர்ந்து மணந்து கொள்ளுதல் அதிசயமாகும் - என்பது கருத்து. இது இந்தக் காலத்தில் எளிதாக நடந்தாலும் பண்டைக் காலத்தில் அதிசயமேயாகும்.

இந்த அடியில் மற்றொரு பொருள் மறைந்துள்ளது. காதலன் காதலியை நெருங்கினான். காதலி நாணத்தால் தன் ஒரு கையால் கண்களை மூடிக்கொண்டாளாம். இதற்குப் பொருளாவது: - ஐந்தாம் குலத்தவர் = ஐந்து விரல்களை உடைய உள்ளங்கைப்பகுதி. பார்ப்பார் = பார்க்கும் கண், அதாவது, நாணங்கொண்டு தன் கையால் கண்களை மூடிக் கொண்டாளாம். இது, அகப் பொருளில், "நாணிக்கண் புதைத்தல்' என்னும் துறையைச் சேர்ந்ததாகும்.