பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 0 81

அல்லது பவளமும், கழுத்திற்குச் சங்கும், காதுக்கு வள்ளையும், கண்ணுக்குக் குவளையும், முகத்திற்குத் தாமரையும், கூந்தலுக்கு முகிலும், இப்படி இன்னும் பலவும் தோற்றுவிட்டதாகவும் - அஞ்சுவதாகவும் - ஓடி மறைவதாகவும் - நாணுவதாகவும் எழுதுவது புலவர்களின் வாடிக்கை. கம்பனும் இதற்கு விதி விலக்கு அல்லன். சீதையின் உறுப்புகட்கு எது எதுவோ தோற்றுவிட்டதாகப் படாத பாடு படுத்தியுள்ளான். இந்தக் கற்பனைக்குச் சீதையும் விலக்கு அல்லள்.

ஆனால் இந்தப் பாடலில், ஆடவனாகிய தயரதனின் பண்புகட்கும் குடையாகிய உடைமைக்கும் சில தோற்று விட்டதாகவும், அவன் இறந்ததால் இவை மகிழ்ச்சி அடைந்ததாகவும் கூறியிருப்பது கம்பன் கையாண்டுள்ள ஒரு புதும்ையாகும். ・ ・・ -

அமிழ்தக் குடை

சடாயு மேலும் புலம்புகிறான். உலகை வாழ வைக்கும் குடை உடையவனே எனது நட்பை ஆய்ந்தறிய நீ இறந்தாயோ? நான் விலங்கு ஆதலால், நட்புக்கடமையைச் செய்யவில்லை-இன்னும் உயிர் விட்டிலேன்: அலங்காரம் என உலகுக்கு அமுதளிக்கும் தனிக்குடையாய் ஆழி சூழ்ந்த கிலம்காவல் அதுகிடக்க நிலையாத நிலையுடையேன்

நேய நெஞ்சின் கலம்காண நடந்தனையோ நாயகனே தீவினையேன்

நண்பி னின்றும் விலங்கானேன் ஆதலினால் விலங்கினேன்

இன்னும் உயிர் விட்டிலேனால்” (22) இது மிகவும் சுவை ததும்பும் பாடல். தயரதனது குடை வெயிலை மறைத்து நிழல் தருவதற்காக உள்ளதன்றாம்; குடி