பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ) ஆரணிய காண்ட ஆய்வு

கொண்டிருப்பவை. எனவே, மலைத் தொடர்ச்சிக்கு நட்பை உவமையாக்கிய கம்பரின் புலமை புகழத் தக்கது.

இராமர் முதலியோர் ஒரு மலை உச்சியிலே, சடாயு அமர்ந்திருப்பதைக் கண்டனர். அந்தச் சடாயு, அரசவை அமைச்சர் போல் தொலை நோக்கு உடைய சிறிய கண்களை உடையவனாம்.

"ஆய்மையின் மந்திரத்து அறிஞனாம் எனச்

சேய்மையின் நோக்குறு சிறுகணான் (5) ஆய்மை=ஆய்தல் - ஆராய்ச்சி, மை விகுதி ஏற்ற தொழில் பெயர். மை விகுதி ஏற்ற பண்புப்பெயர் ஏராளம் - ஏராளம். ஆனால், மை விகுதி ஏற்ற தொழில் பெயர் அருகியே இருக்கும்.

மந்திரம் அமைச்சரவை, மந்திரத்து அறிஞன்=மந்திரி; தமிழில் அமைச்சன். அமைச்சர்கள் தொலை நோக்கு உடையவர்கள்; எதிர்காலத்தில் என்னென்ன நடக்கக் கூடும் . நம் அரசு என்ன செய்யவேண்டும் - எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் - என ஆழ்ந்தும் கூர்ந்தும் எண்ணிப் பார்ப்பவர்கள். வடமொழியில் தூர திருட்டி' என்பதும், ஆங்கிலத்தில் Foresight என்று சொல்வதும் இந்தத் தொலை நோக்குதான்.

அறிஞர்களைப் பொறுத்தமட்டில் தொலை நோக்கு இரு பொருள் உடையதாகும். எதிர்காலத்தைப் பற்றி எண்ணுவது ஒரு பொருள். கண் பார்வையைத் தொலைவில் செலுத்துவது என்பது மற்றொரு பொருள். அறிஞர்கள் ஒன்றைப் பற்றி ஆழ்ந்து எண்ணுங்கால், நெற்றியை விரல் களால் தாங்கியபடிக் குனிந்து கொண்டிருப்பது ஒரு வகை - அல்லது, அண்ணாந்து விண்ணை நோக்கிக் கொண்டிருப்பது இன்னொரு வகை - அல்லது, முகவாய்க்கட்டையில் கையை வைத்துக் கொண்டும் கண்களைச் சிறிது சுருக்கிக் கொண்டும்