பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 E. ###L ಹTHIL ಫ್ರಿಹಿ6

“கரப்பவர்க்கு யாங்கொளிக்குங் கொல்லோ இரப்பவர்

சொல்லாடப் போஒம் உயிர்” (1070) என்னும் குறள்கள் ஒத்திட்டு ஆய்வு செய்யத்தக்கன. மற்றும் இங்கே, மற்றவரைப் போல் எமன் பிடித்துப் போகும்படி இறவாமல், பிறர்க்கு உதவி செய்து செய்து இறந்து போனவர்கள், மிகவும் நோன்பு செய்தவராவர் என்னும் கருத்துடைய -

"நோற்றோர் மன்ற தாமே கூற்றம்

கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோர்" (61 : 1, 2) என்னும் அகநானூற்றுப் பாடல் பகுதியும் எண்ணத் தக்கது. மேலும் சொல்கிறான் இராமன். என் அம்பால் அரக்கர்களின் தலை போன குறையுடலங்கள் கூத்தாடுவதை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். வில்லையும் அம்பறாத் தூணியையும் சுமந்து கொண்டிருக்கும் என் தோள்கள் சுமைத் துன்பம் நீங்கி அதாவது சுமந்த பயனை அடைந்த தாக எண்ணி ஆறுதல் கொள்ளும்:

"கிவந்த வேதியர் நீவிரும் தீயவர்

கவந்த பந்தக் களி நடம் கண்டிட அமைந்த வில்லும் அருங்கணைத் துணியும் சுமந்த தோளும் பொறைத் துயர் தீருமால்' (20) கவந்தம் = குறையுடல். பந்தம் = கூட்டம். இது ஒரு சுவையான - புதுமையான கருத்து வெளியீடாகும். ஏதோ ஒன்றை இவ்வளவு நேரம் சுமந்ததற்கு என்ன பயன் என உலகியலில் கேட்கிறார்கள் அல்லவா? மகன் போரில் தோற்றுவிடின், அவனை வயிறு சுமந்ததால் யாது பயன் என மறக் குல மடந்தை நோவதாக நூல்களில் படிக்கிறோம் அல்லவா? அவ்வாறே, அரக்கர்களை அம்பு எய்து கொன்றால் தோள் சுமந்த பயன் கிட்டியதாகும்.