பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 95

தெண்திரைக் கரத்தின் வாரித் திருமலர் தூவிச்

செல்வர்க் கண்டு அடி பணிவ தென்னப் பொலிந்தது

கடவுள்யாறு' (2)

செல்வர்= இராம இலக்குமணர். ஐம் பூதங்களுள் காற்று, நெருப்பு ஆகியவற்றை முறையே வாயுபகவான், அக்கினி தேவன் என ஆணாகவும், விண்-நீர்-மண் ஆகிய வற்றை முறையே விண்மகள் (ஆகாய வாணி), நீர்மகள் (கங்காதேவி), நில மகள் (பூமாதேவி) எனப் பெண்ணாகவும் கூறுதல் மரபு. எனவே, கோதாவரியைப் பெண்ணாகக் கூறியதில் வியப்பில்லை.

கம்பர் அயோத்தியா காண்டம்-கங்கைப் படலத்திலும் கங்கையை இவ்வாறு கூறியுள்ளார். கங்கை என்னும் நங்கை அலை என்னும் கையால் ஏந்தி இம் மூவரையும் கரை ஏற்றினாள் எனக் கூறியுள்ளார். . . . . .

'சாந்தணி புளினத்தின் தடமுலை உயர் கங்கை காந்திள மணி மின்னக் கடிகமழ் கமலத்தின் சேக்தொளி விரியும் தெண்திரை எனும் கிமிர்கையால் ஏந்தினள் ஒரு தானே ஏற்றினள் இனிது அப்பால்” (34)

என்பது பாடல்.

கம்பர், கோதாவரி குவளையாகிய கண்ணால் பார்ப் பதற்காகக் கூறியுள்ளார். இளங்கோ அடிகள், காவிரி கயலாகிய கண்ணால் நோக்குவதாகக் கற்பனை செய் துள்ளார்.

'மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அது

போர்த்துக் கருங்கயல்கண்விழித்து ஒல்கி கடந்தாய் வாழி காவேரி"