பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 口237

‘வாழாதும் வாழ்ந்தவர்கள் இறுதியில் கம்பி எண்ணுவது கண்கூடு. இதே நிலைதான் இராவணனுக்கு நேரும்.

இதுபற்றி எண்ணிச் சீதை ஏங்க, சடாயு உயிர் பிரியாமல் உணர்வற்றுக் கிடந்தான். இராவணன் சீதையை இலங்கைக்குக் கொண்டு சென்று அசோக வனத்தில் வைத்தான். இவர்களின் நிலைமை இவ்வாறு இருக்க,. இனி இராம இலக்குவரின் நிலைமை பற்றிக் காணலாம்.

சீதையைத் தனித்து விட்டு வந்தமைக்கு வருந்திய படியே இலக்குவன் இராமனைத் தேடிச் சென்றான். மாரீசனின் மாயக் குரலை நம்பிச் சீதை வருந்துவாள் என மயங்கியபடியே இராமன் குடில் நோக்கி வந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு கொண்டனர்.

மாரீசனின் பொய்க்குரலை சீதை நம்பி அஞ்சி இலக்கு வனை அனுப்பியிருக்க வேண்டும். அதனாலேயே, இலக்குவன் என் கட்டளையைக் கடந்து வந்திருக்க வேண்டும் என இராமன் எண்ணினான் (151).

இருவரும் தழுவிக் கொண்டனர். இராமன் நடந்ததை வினவ, இலக்குவன் நடந்ததை விவரமாகச் சொன்னான். கேட்ட இராமன் வருந்தலானான்:

அழியா உள்ளம் அழிவு

இலக்குவா நீ வந்தது உன் குற்றமன்று; சீதை நடந்து கொண்டதும் குற்றமாகாது. மானைப் பிடிக்க வேண்டா என்று நீ தடுத்தும் கேட்காமல், சென்ற நானே குற்றவாளி என்று அழியாத தன் உள்ளம் அழியலானான்:

“வந்தாய் திறத்தின் உனதன்று குற்றம்,

மடவாள் மறுக்கம் உறுவாள் சிந்தா குலத்தொடு உரை செய்த

செய்கை அதுதீதும் அன்று,