பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 0. ஆரணிய காண்ட ஆய்வு

செல்லும் வழியில் சுதீக்கணன் என்னும் முனிவன் இவர்களை வரவேற்றான். இராமனும் சுதீக்கணனும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசிக் கொண்டனர். இறுதியில், சுதீக்கணன் இராமனை நோக்கி, யான் இதுகாறும் செய்து வந்த தவம் எல்லாவற்றையும் - தவப் பயன் யாவற்றையும் கொள்க என்று வேண்டினான்: .

"அவம் இலா விருந்தாகி என்னால் அமை

தவமெலாம் கொள்க தக்கணையா என்றான்” (31)

அவம் இலா விருந்து = பயன் இன்றி வெற்றுபடியாய்ப் போகாத விருந்து அதாவது பயனோடு செல்லும் விருந்து. இங்கே பயன் என்பது, முனிவன் தன் வரமனைத்தையும் காணிக்கையாக்குவது. தட்சணை என்றோ தக்ஷணை என்றோ எழுதாமல் தக்கணை எனத் தமிழ் வடிவம் தந்திருக்கும் கம்பரின் மொழிக் கொள்கை பாராட்டத் தக்கது.

அருளும் தவமும்:

தவத்தைக் காணிக்கையாகத் தருவதாகச் சொன்ன சுதீக்கணனை நோக்கி இராமன் கூறினான். ஐயனே! யான் இங்கு வந்ததும் அருளோடு வரவேற்று ஒம்பினர்களே-அந்த அருளினும் தவம் பெரிதோ? அந்த அருளே போதும் என்றான்:

'மறைவலான் எதிர் வள்ளலும் கூறுவான்

இறைவ கின்னருள் எத்தவத்திற்கு எளியது? (32) என்பது பாடல் பகுதி. மறைவலான் = வேதம் வல்ல முனிவன். வள்ளல் =இராமன். இறைவ எனப்பெருமையுடன் முனிவனை இராமன் விளித்துளான். மறைவலான் ஏற்பவன் வள்ளல் கொடுப்பவன். அங்ஙனம் இருக்க, ஏற்பவன் கொடுப்பவனுக்குக் கொடுக்க முயன்றது பாராட்டத்