பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 0 119

மற்றும், அவள் கணவனை இழந்த விதவையாதலின், அதை மறைக்கத் தன்னைக் கன்னி எனக் கூறிக் கொள்கிறாள்.

இராமன் கேட்டவற்றுள் பேரையும் உறவினரையும் கூறி விட்டாள். ஊரைக் குறிப்பிடவில்லை. அவள் இப்போது இந்த வனத்துக்கு அரசியாயிருப்பதால் எந்த ஊரைச் சொல்வது? இராவணன் தங்கை என்றாலே போதுமே - இடம் தானே தெரிய வரும்.

வினா விடை

இராமன் அரக்கியை நோக்கி நீ இராவணன் தங்கை என்கிறாய். உனக்கு இந்த உருவம் வந்தது எவ்வாறு என்று வினவினான். எனக்கு அரக்கர்களைப் பிடிக்காமையால் இங்கு வந்து தவசியரோடு சேர்ந்து தவம் செய்து இந்த உருவம் பெற்றேன் என்றாள்.

நீ வந்த நோக்கம் என்ன என்று இராமன் வினவ, தங்கள் காம நோயை ஆடவரிடம் தாங்களே உரைப்பது நற்குல மங்கையர்க்கு அழகு அன்று; இருப்பினும் தூது அனுப்ப எனக்கு வேறு துணையின்மையால் யானே கூறு கின்றேன். காமன் செய்யும் துன்பத்தைத் தீர்க்க வேண்டு கிறேன் என்றாள் அவள்.

"தாமுறு காமத் தன்மை தாங்களே உரைப்பதென்பது

ஆமெனல் ஆவதன்றால் அருங்குல மகளிர்க்கு அம்மா! ஏமுறு உயிர்க்கு நோவேன் என் செய்கேன் யாரும்

இல்லேன் காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையைக் காத்தி * - என்றாள்' (45)

ஆடவரிடம் தாமாகச் சென்று மோதமாட்டார்கள்யார்? குலமகளிர் - எத்தகைய குல மகளிர்? அருங்குல