பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் - 279

பாசி படிந்துள்ளனவாம். காதுகளின் பெரிய துளைகளில் போய்த் தங்குவதற்காகத் துரிஞ்சில்கள் (வெளவால்கள்) சென்றனவாம். அத்துளைகளில் முன்னமேயே ஆந்தைகள் தங்கியிருந்ததால், இடம் கிடைக்காமல், துரிஞ்சில்கள் வலப் புறமும் இடப்புறமுமாக அலைந்து கொண்டிருந்தனவாம்.

'பாங்தள் நால்வன போலும் உடல்மயிர்

பாசிபட்ட பழந்தொளை மூக்கின;

ஆங்தை பாந்தி யிருப்பத் துரிஞ்சில் புக்கு

அங்கும் இங்கும் உலாவு செவியன’ (140)

என்பது கலிங்கத்துப் பரணிப் பாடல். பாந்தள் - பாம்பு. நால்தல் தொங்குதல்.

பேய்களின் செவிகளில் ஆந்தைகள் உள்ளன - இங்கே கவந்தன் செவிகளில் இராகு கேதுகள் உள்ளனவாம். சுவைககக் கூடிய உயர்வு நவிற்சிக் கற்பனை யிது.

நரகத்தில் கிடந்து வருந்தும் பல உயிர்களினும், கவந்தனின் வயிற்றில் கிடந்து உழலும் உயிர்கள் மிகுதி யாம். அதனால், கவந்தன் வயிறு நரகின் சிறுமையை எண்ணிச் சிரிக்கின்றதாம். இதுவும் ஒரு பெரிய கற்பனை. கோட்டை வாயில்

கவந்தனின் வாய் வழியாகப் பல உயிர்களும் வயிற்றுக்குள் செல்வதால், எமனின் கோட்டை வாயில் போல் வயிறு இருக்கிறதாம்.

“எமன் கொற்ற வாய்தல் செயல்குறித்த வாயினான்’ (18) கொற்றம் = வன்மை. வாய்தல் = வாயில்.

கவந்தனின் கைகளிடையே அகப்பட்ட இராம இலக்குவர் அவனை ஒரு பூதமென்றெண்ணி அஞ்சினர். இராமன் தம்பியை நோக்கி, நான் பூதத்திற்கு இரை