பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223 0 சுநதர சணமுகனார் • مہسمِ ۔ .,

ஏழாய் = ஏழையே = பெண்ணே! இராவணனுக்கு அரியது ஒன்றும் இல்லையாம். இங்கே, பட்டினப் பாலையில் கரிகால் வளவனைப் பற்றிக் கூறப்பட்டுள்ள

'மலை அகழ்க்குவனே கடல் துர்க்குவனே

வான் வீழ்க்குவனே வளிமாற் றுவன்' (271-72)

என்னும் பகுதி ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.

மேலும் சீதை இழித்துரைக்க, இராவணன் சினம் கொண்டு தன் பழைய உருவெடுத்தான். எளிய உருவத் திலிருந்து வலிய உருவம் எடுத்தமை, நீளமாய் இருந்த நாகம் தீடீரென எளிய தலையிலிருந்து ஐந்து படங்களை விரித்தாற் போன்று இருந்ததாம்:

'உருகெழு சீற்றம் பொங்கிப் பணம்

விரித்து உயர்ந்தது ஒத்தான்” (65)

பாம்பு படம் விரித்து உயர்ந்து நின்றது பெரிய மாற்றம்

தானே.

அரக்கத் தோற்றத்தைக் கண்டு சீதை அஞ்சினாள். அப்போது, பெண்னே! நீ இசைந்தால் ஏழுலகமும் ஆளும் பெருஞ் செல்வத்தை உனக்கு அளிப்பேன் என்றானவன்.

உடனே சீதை தன் கைகளால் காதுகளைப் பொத்திக் கொண்டு, அரக்கா! நான் இராமனின் கற்புளைய மனைவி. நீ உலக ஒழுக்க நெறியைப் பேணாய், வேள்வியில் தேவர்க்கு இடும் அவியுணவை நாய் விரும்பியது போல நீ என்னை விரும்புகிறாய் (நாயே).

'செவிகளைத் தளிர்க் கையாலே சிக்குறச்

சேமம் செய்தாள் கவினும் வெஞ் சிலைக்கை வென்றிக்

காகுத்தன் கற்பினேனைப்