பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 ஆரணிய காண்ட ஆய்வு

வனம் = தண்ணீர். சேமவில் குமரன் - இலக்குவன். உங்கள் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் என்று உலகியலில் சொல்வதுண்டு. அவ்வாறே இலக்குவன் சீதையின் காலில் விழுந்தான். சிலர் கால்களைப் பிடித்துக் கொள்வர். இவன் தொடாமல், அடியாகிய தாமரையின் முன்னால் விழுந்து தரையைத் தழுவினான். அடிப்பூ = அடியாகிய தாமரை. அடிப்பூமுகம் = அடிக்கு முன் புறம்

அன்னம் = சீதை. தாமரைத் தடாகம் = எரியும் காட்டு நெருப்பு. பொய்கையில் செந்தாமரை மலர்கள் பூத்திருக்கும் தோற்றம் நெருப்பு எரிவது போல் உள்ளது; அதனால் காட்டு நெருப்புக்குத் தாமரைத் தடாகம் ஒப்பாக்கப்பட்டுள்ளது.

இங்கே முத்தொள்ளயிரப் பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது. பொய்கையில் செவ்வாம்பல் மலர்ந்திருப்பது, பொய்கை தீப்பற்றி எரிவது போல் இருந்ததாம். உடனே பறவைகள் தம் குஞ்சுகளைக் கையாகிய சிறகுகளால் மறைத்துக் கூச்சல் இட்டனவாம். -

‘அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாய் அவிழ

வெள்ளம் தீப்பட்ட தெனவெரீஇப் - புள்ளினம்தம் கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ நச்சிலை வேல் கோக்கோதை நாடு” (110)

என்பது பாடல்.

தளிர்கள் பொன்னிறமாய் - செந்நிறமாய் எரிபோல் இருக்கும். பிரபுலிங்க லீலையில் இது எரி புரை தளிர்' (19:7) எனப்பட்டுள்ளது. தளிரே நெருப்பு போன்ற தெனில், தாமரை மலர் நெருப்பு போன்றிருப்பதில் வியப்பு இல்லை.

வனம் என்பதற்குக் காடு எனச் சிலர் பொருள் கூறியுள்ளனர். அதனினும் நீர் என்னும் பொருளே சாலச்