பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 0 ஆரணிய காண்ட ஆய்வு

தங்கைக்கு அரசு

கணவனைப் பிரிந்த கலக்கத்தோடு இருக்கும் போதே இவளது முகப் பொலிவு இவ்வளவு கவர்ச்சியாயிருக்கிறதே. என்னுடன் வந்து எனக்கு மனைவியாகி மகிழ்ச்சியுடன் புன்முறுவல் பூத்தாளே யாயின், ஆகா! அந்த முறுவல் எவ்வளவோ கவர்ச்சியா யிருக்குமே! இவ்வளவு பெரிய வாய்ப்பை அளித்த என் தங்கை சூர்ப்பணகைக்கு என் அரசைக்கூட அளித்து விடுவேன்:

"உளைவுறு துயர் முகத்து ஒளி இது ஆம் எனின்

முளை எயிறு இலங்கிடும் முறுவல் என்படும்! தளை அவிழ் குழல் இவள் கண்டு தந்த என் இளையவட்கு அளிப்பன் என் அரசு

என்றெண்ணினான்” (32) சீதை இராவணனைக் குடிலுக்குள் வரவேற்றுப் போற்றினாள். சீதையின் வரலாற்றை அவன் வினவ, சீதை அயோத்தி தொடங்கி முழுவதும் சொன்னாள்.

இராவணனது வரலாற்றைச் சீதை கேட்டாள். அவன், தான்தான் இராவணன் என்பதை வெளிப்படையாய்க் காட்டிக்கொள்ளாமல், படர்க்கையாகவே வைத்து தன்னுடைய பரந்துபட்ட பெருமை முழுதும் சொல்லி அவ்விராவணன் இருக்கும் இலங்கையிலிருந்து வந்துள்ளேன் என்றான்.

பின்னர்ச் சீதை, தவசியர்க்கு உடம்பும் மிகை என்பார்களே. நிலைமை இவ்வாறிருக்க, தவசியாகிய நீங்கள் கொடிய அரக்கரின் இருப்பிடத்தில் இருக்கலாமா என்றாள்:

“பாதக அரக்கர்தம் பதியின் வைகுதற்கு

ஏதுஎன்? உடலமும் மிகைஎன்று எண்ணுவீர்” (51)