பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 0 101

அடக்கும் மறவர்க்கும் பெண்களிடையே மதிப்பு உண்டு. தோள் கண்டார் தோளே கண்டார், என்பதும் கம்பரின் பாடல் பகுதியே.

கதைகளிலும் நாடகங்களிலும் இந்தச் சுவைக்கும் குறிப்பிட்ட விழுக்காடு இடம் உண்டு. எனவே, படிப்பவரின் உள்ளங்களைக் கவர்ந்து மகிழ்விப்பதற்காகவும் புலவர்கள்

இவ்வாறு எழுதி விடுவது உண்டு.

சிறிய முறுவலும் புதிய முறுவலும்

இவர்களின் வரவைக் கண்ட அன்னம் ஒதுங்கிச்

சென்றதாம். உடனே இராமன் கீதையின் நடையை

நோக்கிச் சிறிய முறுவல் செய்தானாம்.

ஆங்கு வந்து நீர் பருகிச் செல்லும் களிற்று யானையின் நடையைக் கண்டு சீதை புதிய முறுவள் பூத்தாளாம்.!

'ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழைய ளாகும்

சீதையின் கடையை நோக்கிச் சிறியதோர் முறுவல்

செய்தான் மாதவள் தானும் ஆண்டு வந்துநீர் உண்டு மீளும் போதகம் நடப்ப நோக்கிப் புதியதோர் முறுவல்

பூத்தாள்” (5) தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில்

' எள்ளல் இளமை பேதைமை மடன் என்று

உள்ளப் பட்ட நகைநான்கு, என்ப" (4) என நான்கு காரணங்களால் சிரிப்பு தோன்றும் என்று கூறியுள்ளார். சீதையின் நடையழகு அளவு அன்னத்தின் நடை இல்லையே என்று இராமனும், இராமனின் நடை அழகு அளவு களிற்றின் நடை இல்லையே என்று சீதையும் அவற்றை எள்ளும் (இகழும்) முறையில் சிரித்தார்களாம். எள்ளல் காரணமாக வந்த நடை இது.